பங்களாதேஷில் புதிய இடைக்கால அரசாங்கம் தேர்தலை தீர்மானிக்கும் போது முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா நாடு திரும்புவார் என அவரது மகன் தெரிவித்துள்ளார்.
அவர் தேர்தலில் போட்டியிடுவாரா என்பது குறித்து அவர் கருத்து வெளியிடவில்லை.
பல வாரங்களாக மாணவர்கள் மேற்கொள்ளப்பட்ட போராட்டங்களால், பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலகி இந்தியாவிற்கு சென்றார்.
இதன்பின்னர்,அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் முஹம்மது யூனுஸ், இடைக்கால அரசாங்கத்திற்கு தலைமை தாங்கினார்.
இந்த அரசாங்கம் தேர்தலை தீர்மானிக்கும் போது ஹசீனா நாடு திரும்புவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் “தற்போதைய பதவிக் காலத்திற்குப் பின்னர் தனது தாயார் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவார் என்றும் ஷேக் ஹசீனாவின் மகன் கூறியுள்ளார்.
புதுடெல்லி பகுதியில் உள்ள பாதுகாப்பான வீட்டில் ஹசீனா தங்கியுள்ளார். அவர் பிரித்தானியாவில் புகலிடம் கோர திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில் பிரித்தானிய உள்துறை அமைச்சு கருத்து தெரிவிக்க மறுத்துள்ளது.
பங்களாதேஷ் பற்றி இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் பிரித்தானிய வெளியுறவு அமைச்சரிடம் கலந்துரையாடியதாகவும், ஆனால் எந்த விபரங்களையும் பகிர்ந்து கொள்ளவில்லை என்றும் கூறியுள்ளார்.