உலகில் மனிதர்கள் அழிந்துவிட்டாலும் ஒரேயொரு உயிரினம் மட்டும் வாழும் என்று கூறினால் உங்களால் நம்ப முடியுமா?
ஆம், அப்படியொரு உயிரினம் தான் டார்டிகிரேட். தமிழில் இதை நீர்க்கரடி என்று அழைப்பார்கள்.
இந்த விலங்கினால் உணவு மற்றும் நீர் இல்லாமல் 30 ஆண்டுகள் வரையில் வாழ முடியுமாம்.
150 டிகிரி செல்சியஸ் 302 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் மற்றும் மைனஸ் 457 டிகிரி குளிரிலும் இதற்கு எந்தவொரு பாதிப்பும் ஏற்படாது.
வெறும் 0.5 மில்லிமீட்டர் அளவே இருக்கும் இந்த உயிரினத்தை வெற்றுக் கண்களால் பார்க்க முடியாது.
இதை கடும் சூடான நீரில் வேக வைத்தாலும் அல்லது அதிகபட்ச பனியில் உறைய வைத்தாலும் சுமார் 200 வருடங்கள் வரையில் தாக்குப்பிடித்து வாழும்.