மத்திய கிழக்கில் போர்க்கப்பல்கள், விமானங்கள் குவிப்பு

மத்திய கிழக்கில் வன்முறை அதிகரித்துள்ள நிலையில் இஸ்ரேலை முடிந்தவரை பாதுகாப்பதற்கு இராணுவ உதவிகளை அதிகப்படுத்துவதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் உறுதியளித்துள்ளார்.

ஹமாஸ், ஹிஸ்புல்லா மற்றும் ஹவுதிகள் உட்பட ஈரானின் அனைத்து அச்சுறுத்தல்களில் இருந்தும் இஸ்ரேலை பாதுகாப்பதற்காக அமெரிக்கா தனது படைகளை மத்திய கிழக்கில் களமிறக்கியுள்ளது.

ஈரானின் தாக்குதலை தடுக்க மத்திய கிழக்கில் கூடுதல் போர்க்கப்பல்கள் மற்றும் கூடுதல் போர் விமானங்களை அனுப்பியுள்ளதாக அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் அறிவித்துள்ளது.

கடந்த ஏப்ரல் மாதமும் இஸ்ரேலுக்கு எதிராக ஈரானால் ஏவப்பட்ட டசன் கணக்கான ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை அமெரிக்கப் படைகள் இடைமறித்து அவை அனைத்தையும் வீழ்த்தின.

கடந்த புதன்கிழமை (07.31.24) இஸ்மாயில் ஹனியே ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள அவரது வீட்டில் படுகொலை செய்யப்பட்டார்.

ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியானின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்வதற்காக அவர் ஈரான் சென்றிருந்தார். இதன்போது ஹனியேவும் அவரது மெய்ப்பாதுகாவலர் ஒருவரும் படுகொலை செய்யப்பட்டனர்.

இந்த தாக்குதலுக்கு இஸ்ரேல் காரணம் என ஈரான் உள்ளிட்ட நாடுகள் குற்றம் சுமத்தும் நிலையில் இஸ்ரேல் இது தொடர்பில் நேரடியாக கருத்து தெரிவிக்கவில்லை.

மேலும் ஈரான் ஜனாதிபதி அயோதுல்லா அலி காமினி, இஸ்ரேல் மீது நேரடி தாக்குதலை நடத்தும்படி தன்னுடைய படைகளுக்கு உத்தரவிட்டதைத் தொடர்ந்து மத்திய கிழக்கில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது.

Recommended For You

About the Author: admin