யாழ்ப்பாணத்தில் பணத்தை காலால் மிதித்து அவமதித்ததாக, குற்றச்சாட்டப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்த சமூகசேவகர் சரீர பிணையில் விடுவிக்கப்பட்டார்.
இவர் அண்மையில் பெருந்தொகைப் பணத்தை காலால் மிதிக்கும் காணொளிப் பதிவுகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தன.
இந்தச் சம்பவம் தொடர்பாக பொலிஸார் அவருக்கு எதிராக வழக்குப் பதிவு, செய்திருந்தனர்.
யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் அவ்வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, அவர் சார்பாக முன்னிலையான சட்டத்தரணி, குற்றம் சாட்டப்பட்டவரின் மனச்சோர்வே நாணயத்தாள்களை மிதித்தமைக்கான காரணம் எனத் தெரிவித்தார்.
சட்டத்தரணி முன்வைத்த காரணத்தை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்று ஏற்க மறுத்ததுடன், பல கேள்விகளையும் எழுப்பியிருந்தது.
எனினும் யாழ்ப்பாணம் மாவட்ட பொலிஸாரின் குற்றத்தடுப்பு பிரிவு முன்வைத்த குற்றச்சாட்டிலிருந்து குற்றம் சாட்டப்பட்ட சந்தேக நபரை நீதவான் நீதிமன்றம் இருவரின் ஆட்பிணைகளில் விடுவித்து உத்தரவிட்டது.