ரோயல் பார்க் கொலைக் குற்றவாளியை உடன் கைதுசெய்யுங்கள்

ரோயல் பார்க் கொலைக் குற்றவாளி ஜூட் ஷமந்த ஜயமஹாவை கைது செய்து நாட்டிற்க அழைத்து வந்து ஆயுள் தண்டனையை நிறைவேற்றுமாறு சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரத்தினம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

ஜனாதிபதியின் செயலாளர், பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், பொலிஸ் மா அதிபர், நீதி அமைச்சின் செயலாளர், சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் மற்றும் குடிவரவுத் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் ஆகியோருக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார்.

ஜயமஹாவுக்கு வழங்கப்பட்ட ஜனாதிபதி மன்னிப்பை உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு இரத்துச் செய்துள்ளது.

இந்நிலையில், தீர்ப்பை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஒவ்வொருவருக்கும் குறிப்பிட்ட அறிவுறுத்தல்களையும் சட்டமா அதிபர்வழங்கியுள்ளார்.

மேலும், ஒவ்வொரு நிறுவனத்திற்கும் சட்டமா அதிபர் அனுப்பியுள்ள எழுத்துப்பூர்வ அறிவுறுத்தல்களுடன் நீதிமன்றத்தின் உத்தரவுகளின் சுருக்கமும் இணைக்கப்பட்டுள்ளது.

நீதிமன்ற உத்தரவை அமல்படுத்துவது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை நீதிமன்றத்தில் தெரிவிக்குமாறு சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால், ஒவ்வொரு நிறுவனமும் மேற்கொண்ட நடவடிக்கைகளின் முன்னேற்ற அறிக்கையை சட்டமா அதிபர் கேட்டுக்கொண்டார்.

நீதிமன்றத்தின் உத்தரவுகளை நடைமுறைப்படுத்துவதற்கு, குறிப்பாக ஜயமஹாவை மீண்டும் சிறையில் அடைக்க, அவரது ஆயுள் தண்டனையை அனுபவிக்க, சம்பந்தப்பட்ட மற்ற அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் நடவடிக்கை எடுக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தேவைப்பட்டால், இந்த விவகாரம் தொடர்பாக சட்டமா அதிபரின் ஆலோசனையைப் பெறவும் குறிப்பிட்ட தரப்பினர்களிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன.

ஜயமஹாவை கண்டுபிடித்து, கைது செய்து, இலங்கைக்கு நாடு கடத்தவும், ஆயுள் தண்டனையை அனுபவிக்க மீண்டும் சிறையில் அடைக்கவும், நீதிமன்றின் உத்தரவுகளை நடைமுறைப்படுத்த, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உதவுமாறு, பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மற்றும் பொலிஸ் மா அதிபர் ஆகியோருக்கு சட்டமா அதிபர் பணித்துள்ளார்.

Recommended For You

About the Author: admin