‘மோசடி பேர்வழி’ மாவையின் தம்பி யாழ். பல்கலைக்கழகத்தை ஏமாற்ற முயற்சி 

‘மோசடி பேர்வழி’ மாவையின் தம்பி யாழ். பல்கலைக்கழகத்தை ஏமாற்ற முயற்சி செய்துள்ளார் என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
50 ஆண்டு காலப் புனிதமான பணிசெய்து  வரும் உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்திற்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டு வரும் ஜேர்மனி வாழ் ‘மோசடிப் பேர்வழி’ மாவை சோ. தங்கராசா.
 உலகத் தமிழ்ப்பண்பாட்டு இயக்கத்தின் செயற்பாடுகளுக்கு அபகீர்த்தி ஏற்படுத்தியும்இழிவான செயல்களில் தொடர்ச்சியாக ஈடுபட்டும் அரசியல் இலாபம் தேடி நிற்கும் மற்றுமொரு ‘மாவை’யின் உடன்பிறப்பு.
உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின்  பெயரைப் பயன்படுத்தி  சரிந்து போன தனது சகோதரரின் அரசியல் செல்வாக்கை நிமிர்த்துவதற்காக யாழ்ப்பாண பல்கலைக்கழக மண்டபத்தில் ‘விழா’ எடுக்கும் பண்பாட்டு இயக்கத்திலிருந்து நீக்கப்பட்ட உறுப்பினர்.
குரும்ப சிட்டி இரா. கனகரத்தினம் போன்ற ‘சிற்பி’களால் உருவாக்கப்பெற்று ஜேர்மனி வாழ் துரை கணேசலிங்கம் , தமிழ்நாடு வாழ் வா.மு.சேதுராமன், கனடா வாழ் எஸ். துரைராசா. சிவா. கணபதிப்பிள்ளை தென்னாபிரிக்கா வாழ் மிக்கிச் செட்டி போன்றவர்களால் ‘உயிர்’  கொடுக்கப்பெற்று இன்னும் நிலைத்து நிற்கும் உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தை சிதைக்கவென ‘கிளம்பியுள்ள’ கிள்ளாடி ‘மாவை சோ. தங்கராசா
50 ஆண்டு காலப் புனிதமான பணிசெய்து  வரும் உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்திற்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டு வரும்  ‘மோசடிப் பேர்வழி’ கள் தொடர்பாக அவதானமாக இருங்கள்
தாயகத்தில் உள்ள  கல்வியாளர்களையும் பொதுமக்களையும் வேண்டி நிற்கும் உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் ‘உண்மையான’ செயற்குழுவின் செயலாளர் நாயகம் ஜேர்மனி வாழ் துரை கணேசலிங்கம்.
கடந்த 50 ஆண்டு காலமாக உலகெங்கும் கிளைகளை அமைத்து தமிழ் மொழிக்கும் பண்பாட்டுக்கும் மற்றும் இளைய தலைமுறையினருக்காகவும் புனிதமான பணிசெய்து  வரும் உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்திற்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் வகையில் ஆங்காங்கே சட்டவிரோதமான முறையில் செயற்பட்டு வரும் ஜேர்மனி வாழ் ‘ மாவை சோ. தங்கராசா உட்பட பலருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க கனடாவைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கும் ‘உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் தலைமையகம் தற்போது துரிதமான செயற்பாடுகளில் இறங்கியுள்ளது என அறியப்படுகின்றது.
இங்கு காணப்படும் இரண்டு பிரசுரங்களில் ஒன்று  எதிர்வரும் யூன் மாதம்  14ம் திகதி தொடக்கம் 16ம் திகதி வரை  யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் உள்ள ‘கைலாசபதி கலையரங்கில் நடைபெறவுள்ளதாக  அறிவிக்கும் துண்டுப் பிரசுரம் ஒன்று.
மற்றையது இந்த மாநாடு என்ற போர்வையில் கபடம் நிறைந்த உள்நோக்கம் கொண்டவரான ஜேர்மனி வாழ் ‘ மாவை சோ. தங்கராசா உட்பட சிலர் யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தின் துணைவேந்தரையும் இந்த மாநாட்டோடு இணைத்து ‘சட்டவிரோதமாக’ உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் பெயரைப் பயன்படுத்துவதாக உலகத்தமிழ் பண்பாட்டு  இயக்கத்தின் துணைத் தலைவரான கனடா வாழ்  சிவா. கணபதிப்பிள்ளை அவர்கள்.  செயலாளர் நாயகம் ஜேர்மனி வாழ் துரை கணேசலிங்கம் அவர்கள் உட்பட மேலும் பலர் ஆட்சேபம் தெரிவித்துள்ளனர்.
இங்கு காணப்படும் இரண்டாவது  பிரசுரம் மேற்குறிப்பிட்ட ஜேர்மனி வாழ் ‘ மாவை சோ. தங்கராசா அவர்களை அவர் வகித்த பதவியிலிருந்து நீக்கும் வகையில் 2019ஆம் ஆண்டு அவருக்கு எழுதப்பெற்ற பதவி நீக்கக் கடிதம்.
அந்த கடிதம் அனுப்பப்பட்டதற்கு காரணம் உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் பொருளாளராக செயற்பட்டு வந்த மாவை  சோ.
தங்கராசா நிதி தொடர்பான விடயங்களில் தவறுகள் இழைத்ததாலும் சரியான முறையில் கணக்குகளை காட்டாமைல் காலம் கடத்தியமைக்காகவும் மேலும் உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் பெயரையையும் அதன் இலட்சணையையும் (லோகோ) பாவித்து தொடர்ச்சியாக பல மோசடிகளில் ஈடுபட்டு வந்தமைக்காக அவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டாலும் அவருக்கு கால அவகாசம் வழங்கப்பெற்றது.
ஆனால், அவர் உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் கனடாவில் இயங்கும் தலைமையகத்திற்கு எதிரான  செயற்படும் வகையில் பல வருடங்களாக செயற்பட்டு வருகின்றார்.
அத்துடன் எதிர்வரும் ஜுன் 14ஆம் திகதி தொடக்கம் 16ஆம் திகதி வரை  யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் உள்ள ‘கைலாசபதி கலையரங்கில்’ நடைபெறவுள்ளதாக  அறிவிக்கும் துண்டுப் பிரசுரம் ஒன்றில் காணப்படும் விபரங்களின் படி உலகெங்கும் வாழும் பல முக்கியமான தமிழ் அன்பர்களையும் ஏமாற்ற முனைந்துள்ளார்.
குறிப்பாக யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தின் தற்போதைய துணைவேந்தர் உயர் திரு பேராசிரியர் ஸ சற்குணராஜா மற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த தமிழ்த் தொண்டர் வி.ஜி. சந்தோசம் மற்றும் மறைந்த ஈழத் தமிழர்களின் தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் அவர்களின் புதல்வர் இலண்டன் வாழ் அ. காண்டீபன் உட்பட சிலரை இந்த துண்டுப் பிரசுரத்தில் அடக்கி அவர்களும் தன்னோடு ‘துணை’ நிற்கின்றார்கள் என்ற மாயை ஏற்படுத்த முனைகின்றார் இந்த ஏமாற்றுப் பேர்வழி’ ஜேர்மனி வாழ்  சோ. தங்கராசா.
எனவே கனடாவில் தலைமையகத்தை கொண்டியங்கும் உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கமானது அதன் தற்போதைய செயலாளர் நாயகம் ஜேர்மனி வாழ் துரை கணேசலிங்கம் அவர்களின் வழிகாட்டலிலும் கனடா வாழ் துணைத் தலைவர் சிவா. கணபதிப்பிள்ளை அவர்களின் தலைமையிலும் துரிதமான நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது என்ற செய்தியை அவர்கள் உகெங்கும் வாழும் இயக்கத்தின் அபிமானிகளுக்கு அறியத்தர விரும்புகின்றார்கள்.
எமது தாயகத்தில் அமைந்துள்ள நம் தமிழர்களின் உயர்கல்விக்கு அடையாளமாகத் திகழும் யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தையும் அதன் உப வேந்தரையும் மேலும் பேராசிரியர் பெருமக்களையும் பல்கலைக் கழக மாணவர்களையும் ஏமாற்றும் வகையில் செயற்பட்டு வரும் ஏமாற்றுப் பேர்வழி’ ஜேர்மனி வாழ்  சோ. தங்கராசாவையும் அவரோடு துணைநிற்கும் ஏனைய ‘கோடரிக் காம்புகளையும்’ யாழ்ப்பாண பல்கலைக் கழகச் சமூகம்’ புறக்கணிக்க வேண்டும் என கனடாவில் தலைமையகத்தைக் கொண்டியங்கும் உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் ‘உண்மையான’தும் கனடிய அரசால் அங்கீகரிக்கப்படடதுமான நிர்வாக சபை வேண்டிக் கொள்கிறது என்பதை அனைவருக்கும் தெரியப்படுத்தும் முகமாகவே இந்தப் பதிவு இடப்படுகின்றது.
உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தோடு தொடர்ச்சியாக இயங்கிவரும் அனைவரும் இதைப் புரிந்து கொள்ள வேண்டுமென கனடாவில் தலைமையகத்தைக் கொண்டியங்கும் உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் முக்கியஸ்த்தர்கள் வேண்டுகின்றனர்

Recommended For You

About the Author: RK JJ