முல்லைத்தீவு மாவட்டம் முள்ளியவளை பொலீஸ் பிரிவிற்கு உட்பட்ட கேப்பாபிலவு மாதிரி கிராமத்தினை சேர்ந்த 14 அகவை சிறுமி ஒருவர் கர்ப்பம் தரித்த சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
சிறுமியின் கர்ப்பத்துடன் தொடர்புடை 5பேர் இதுவரை சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்..
கேப்பாபிலவு மாதிரி கிராமத்தினை சேர்ந்த 14 அகவையுடைய பாடசாலை மாணவி ஒருவர் கர்ப்பம் தரித்த சந்தேகத்தில் வற்றாப்பளை பகுதியை சேர்ந்த 59 அகவையுடைய நபர் ஒருவரை கடந்த 28.05.2024 அன்று முள்ளியவளை பொலீசார் கைது செய்துள்ளார்கள்.
இவர் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் குறித்த மாணவியின் கர்பம் தொடர்பில் முள்ளியவளை பொலீசார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு மாணவியின் வாய் முறைப்பாட்டில் இருந்து பெற்றுக்கொண்ட தகவலுக்கு அமைய கடந்த வாரம் கேப்பாபிலவினை சேர்ந்த 30 அகவையுடைய நபர் ஒருவரை கைது செய்த பொலீசார் அவரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியபோது அவரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்
குறித்த சிறுமி எத்தனை ஆண்களுடன் தொடர்பு வைத்துள்ளார் என்ற தொடர் விசாரணையில் முள்ளியவளை பொலீசார் நுணுக்கமாக விசாரித்ததில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகிய நிலையில்
11.06.2024 அன்று குறித்த சிறுமியின் வாய்முறைப்பாட்டிற்கு அமைய மேலும் மூன்று இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளார்கள் அதில் ஒருவர் 16 அகவையுடைய சிறுவன்.
16,17,19 அகவையுடைய கேப்பாபிலவு மாதிரி கிராமத்தினை சேர்ந்த இளைஞர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
சாதாரணதரத்தில் கல்வி கற்றுவரும் 16 அகவையுடைய பாடசாலை மாணவன் ஜஸ் பாவனைக்கு அடிமையாகியுள்ளமை திடுக்கிடும் தகவலாக காணப்படுகின்றது.
இவ்வாறு கைதுசெய்யப்பட்ட சிறுவன் உள்ளிட்ட மூன்று இளைஞர்களும் மருத்துவ பரிசோதனைக்காக முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் சட்டவைத்திய அதிகாரியின் பாரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டபோது கேப்பாபிலவினை சேர்ந்த 16 அகவையுடை சிறுவன் ஜஸ் போதைப்பொருள் பாவித்துள்ளமை தெரியவந்துள்ளது.
கைதுசெய்யப்பட்ட 16 அகவையுடை மற்றும் 19 அகவையுடைய இருவரும் கடந்த காலத்தில் குறித்த மாணவியின் வீட்டில் சென்று மாணவியுடன் உறவு கொண்டுள்ளமையும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
குறித்த மாணவன் கல்வி கற்றுவரும் பாடசாலையில் ஏனைய மாணவர்களின் நிலை என்ன?
இந்த 16 அகவையுடைய பாடசாலை மாணவன் கல்வி கற்றுவரும் குறித்த பகுதியில் உள்ள பாடசாலையில் ஏனைய மாணவர்களின் நிலை எவ்வாறு என்பது கேள்விக்குறியாகியுள்ளது.
இந்த மாணவனுக்கு நண்பர்கள் வட்டம் ஒரே வகுப்பில் கல்வி கற்றுவரும் மாணவர்களின் நிலை என்ன? போதைப்பொருள் எவ்வாறு பாடசாலை மாணவர்களின் கைகளுக்கு செல்கின்றது இவ்வாறு பல கேள்விகள் எழுந்துள்ளன.
முல்லைத்தீவு மாவட்டத்தில் 60 ற்கும் மேற்பட்ட அரச சார்பற்ற நிறுவனர்கள் பணியாற்றி வருகின்றன, ஆனால் மக்கள் மாணவர்கள் மத்தியில் போதை பாவனை ஒழிப்பினை முன்னெடுக்கின்றார்களா?
இவ்வாறான சம்பவங்கள் முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடர்ச்சியாக இனம் காணப்படுகின்றமையானது அரச திணைக்களங்களின் அதிகாரிகளின் செயற்பாடுகளின் வெளிப்பாடுகளையே சுட்டி நிக்கின்றன.
சமூக மட்டத்தில் பணிசெய்யும் அரச சார்பற்ற நிறுவனங்கள் சிறவர் துஸ்பிரயோகங்கள், போதைப்பொருள் பாவனைத்தடுப்பு என முதன்மை வீதி ஓரங்களை அட்டிய பகுதிகளில் விழிப்புணர்வுகளை ஏற்படுத்தினாலும் கிராமபுறங்களில் நடைபெறும் வன்முறைகள், சட்டத்திற்கு முரணான செயற்பாடுகளை இனம் கண்டு அவற்றை தடுப்பதற்கான நடவடிக்கையினை முன்னெடுக்கவேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கருத்தாக காணப்படுகின்றது.
கேப்பாபிலவு சிறுமி கர்ப்பம் ஆக்கிய சம்பவமானது சிறுமியிடம் மேற்கொண்ட விசாரணைகள் மூலம் கடந்த 2022 ஆம் ஆண்டு தொடக்கம் குறித்த நபர்கள் சிறுமியுடன் உறவில் இருந்துள்ளமை தெரியவந்துள்ளது.
இவ்வாறு கைதுசெய்யப்பட்ட பாடசாலை சிறுவன் உள்ளிட்ட மூவரும் 11.06.2024 அன்று முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியபோது அதில் இருவரை விளக்கமறியலில் வைக்க மன்று உத்தரவிட்டுள்ளதுடன் 16 அகவையுடை பாடசாலை சிறுவனை யாழ்ப்பாணம் அச்சுவேலியில் உள்ள சிறுவர் நன்நடத்தை இல்லத்திற்கு அனுப்பிவைக்குமாறும் உத்தரவிட்டுள்ளார்.
இந்த வழக்கு தொடர்பான விசாரணை எதிர்வரும் 19.06.2024 அன்று முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.