வாயினால் கின்னஸ் சாதனை படைத்தஅமெரிக்க யுவதி!

அமெ­ரிக்­காவைச் சேர்ந்த சமந்தா ரம்ஸ்டேல்(Samantha Rumsdale) எனும் 21 வய­தான யுவதி, உலகின் மிகப் பெரிய வாயைக் கொண்டவராக காணப்படுகின்றார்.

இதற்­காக அவர் கின்னஸ் சாதனைப் புத்­த­கத்­திலும் இடம்­பெற்­றுள்ளார். இந்த அங்­கீ­கா­ரத்­துடன் சமூக வலைத்தள பிர­ப­ல­மா­கவும் சமந்தா ரம்ஸ்டேல்(Samantha Rumsdale) விளங்­கு­கிறார்.

32 லட்சம் பேர் அவரை சமூக வலைதளத்தில் பின்­தொ­டர்­கின்­றனர். அண்­மையில் அவர் பற்­சி­கிச்­சைக்­காக பற்­சி­கிச்சை நிலை­ய­மொன்­றுக்கு சென்றார். மிகப் பெரிய வாயைக் கொண்ட சமந்தா(Samantha Rumsdale) தமது பற்­சி­கிச்சை நிலை­யத்­துக்கு வரு­வதை அறிந்த ஊழி­யர்கள் பெரும் மகிழ்ச்­சி­ய­டைந்­தனர்.

இதனால், அவர்கள் செங்­கம்­பளம் விரித்து சமந்­தா­வுக்கு (Samantha Rumsdale)வர­வேற்று அளித்­தனர். அவ­ருக்கு சிகிச்சை அளிக்­கும்­போது, வாயை விரித்து வைத்­தி­ருப்­ப­தற்­காக பயன்­ப­டுத்­தப்­படும் சாதனம் தேவை­யே­ப­ட­வில்லை என மருத்­துவர் எல்க் சேயுங்(Elk Seung) தெரி­வித்­துள்ளார்.

பற்­சி­கிச்சை நிலை­யத்­துக்கு சென்­ற­போது பிடிக்­கப்­பட்ட வீடி­யோ­வையும் டிக்­டொக்கில் சமந்தா ரம்ஸ்டேல்(Samantha Rumsdale)வெளி­யிட்­டுள்ளார். இந்த வீடியோ 27 லட்சம் தட­வைகள் பார்­வை­யி­டப்­பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

சமந்தா ரம்ஸ்டேல்(Samantha Rumsdale) வாயை முழு­மை­யாக திறந்தால் இரு உத­டு­க­ளுக்கும் இடை­யி­லான இடை­வெளி 6.56 சென்­ரி­மீற்­ற­ராக உள்­ளது. அவரின் வாயை அக­ல­மாக விரிக்கும் போது அதன் இரு முனை­க­ளுக்கு இடை­யி­லான நீளம் 10 சென்­ரி­மீற்­ற­ராக உள்­ளது.

அமெ­ரிக்­காவின் கெனக்­டிகட் மாநி­லத்தைச் சேர்ந்த சமந்தா ரம்ஸ்டேல் சிறிய வய­தி­லி­ருந்தே பெரிய வாயைக் கொண்­டி­ருந்தார். அவரின் குடும்­பத்தில் வேறு எவ­ருக்கும் இது போன்ற வாய் இல்லை.

பாட­சா­லையில் தனது பெரிய வாய் கார­ண­மாக தான் கேலிக்கு ஆளா­ன­தாக சமந்தா கூறு­கிறார். ஆரம்­பத்தில் தனது பெரிய வாய் குறித்து தான் கவ­லை­ய­டைந்த போதிலும் பின்னர் தான் அதை ஏற்றுக்கொண்டதாக அவர் கூறியுள்ளார்.

‘எனது வாய் காரணமாக நான் இந்தளவு பிரபலமாகுவேன் என நான் எண்ணியிருக் கவில்லை’ எனவும் சமந்தா ரம்ஸ்டேல்(Samantha Rumsdale) தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: webeditor