கனேடிய மூதாட்டியொருவர் தனது நூறாவது பிறந்த நாளை வித்தியாசமாக கொண்டாடி மகிழ்ந்துள்ளார்.
கனடாவின் நோவோ ஸ்கோட்டியாவைச் சேர்ந்த எட்டா ஜெமிசன் (Etta Jamieson ) என்ற மூதாட்டி தனது நூறாவது பிறந்த நாளை முன்னிட்டு 100 சிறுவர் தொப்பிகளை பின்னியுள்ளார்.
கடந்த ஓராண்டு காலமாக இந்தப் பெண் சுமார் 100 சிறுவர் தொப்பிகளை பின்னியுள்ளார்.
வசதி குறைந்த சிறுவர்களுக்காக இந்த தொப்பிகளை தாம் பின்னியதாகத் தெரிவித்துள்ளார்.
100 தொப்பிகளை பின்னக் கிடைத்தமை பெரும் மகிழ்ச்சியை உருவாக்கியுள்ளது என ஜெமிசன் தெரிவித்துள்ளார்.
பிற நபர்களுக்கு உதவிக்கூடிய அளவில் உடல் ஆரோக்கியம் இருப்பது மிகவும் மகிழ்ச்சியான விடயம் என அவர் தெரிவித்துள்ளார். கடந்த 8ம் திகதி ஜெமிசன் தனது நூறாவது பிறந்த நாளை கொண்டாடியிருந்தார்.
கடந்த 30 ஆண்டுகளாக தொப்பிகளை பின்னி வருவதாகவும் வசதி குறைந்த சிறுவர்களுக்கு உதவி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.வசதி குறைந்த சிறுவர்களுக்கு உதவி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
நிக்கரகுவா, மாலாவி போன்ற வறிய நாடுகளைச் சேர்ந்த பிள்ளைகளுக்காக இந்த தொப்பிகள் அனுப்பி வைக்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
அடுத்தவர்களுக்கு உதவுவது முக்கியமானது எனவும் அதன் ஊடாக நாம் மகிழ்ச்சியாக வாழ முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.