சுசித்ரா மற்றும் கார்த்திக்குமார் கணவன், மனைவியாக வாழ்ந்து சில கருத்து வேறுபாடுகளின் காரணமாக கடந்த 2018ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தனர்.
இந்நிலையில் பாடகி சுசித்ரா அண்மையில் நேர்காணலொன்றில், தனது கணவர் கார்த்திக் குமார், மற்றும் தனுஷ், த்ரிஷா உள்ளிட்டோரைப் பற்றி சில கருத்துக்களை கூறியிருந்தார்.
அதில் தனது முன்னாள் கணவர் கார்த்திக்கும் நடிகர் தனுஷூம் தன்பால் ஈர்ப்பாளர்கள் என்றும் அவர்களுக்கு போதைப் பழக்கம் இருப்பதாகவும் கூறியிருந்தார்.
சுசி லீக்ஸிற்கு தான் காரணமில்லை. தனது கணவர் தன்னை பகடைக்காயாய் பயன்படுத்தி இதனை வெளியிட்டு தனது கெரியரையே அழித்து விட்டதாகவும் கார்த்திக்கின் குடும்பமும் சைக்கோ குடும்பம் என பல குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார்.
இந்த நேர்காணல் வேகமாக பரவி, பேசுபொருளாக மாறியது.
இந்நிலையில் முன்னாள் மனைவியாக சுசித்ரா, பேட்டியில் கூறிய கருத்துக்கள் தனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் இருப்பதால், ஒரு கோடியே ஆயிரம் ரூபாயை தனக்கு மான நஷ்ட ஈடாக வழங்க உத்தரவிடக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார் நடிகர் கார்த்திக் குமார்.
அந்த மனுவில் தன்னைப் பற்றியும் தனது குடும்பத்தைப் பற்றியும் அவதூறான கருத்துக்களை தெரிவிக்க பாடகி சுசித்ராவுக்கு தடை விதிக்கவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்நிலையில் வழக்கு குறித்து விசாரித்த நீதிபதி, ‘கார்த்திக் குமார் பற்றி அவதூறு கருத்துக்களை தெரிவிக்கக்கூடாது’ என சுசித்ராவுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.
மேலும் இந்த மனுவுக்கு சுசித்ரா பதிலளிக்க உத்தரவிட்டு ஜூலை 1ஆம் திகதிக்கு வழக்கை விசாரணையை தள்ளி வைத்துள்ளனர்.