வட்ஸ்சப் வழங்கியுள்ள அட்டகாசமான அப்டேட்

வாட்ஸ்அப் நிறுவனம் தொடர்ந்து புதிய அம்சங்களை வெளியிட்ட வண்ணம் உள்ளது. குறிப்பாக இந்நிறுவனம் கொண்டுவரும் ஒவ்வொரு அம்சங்களும் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது.

இந்நிலையில் மீண்டும் ஒரு புதிய அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது வாட்ஸ்அப் நிறுவனம்.

Delete for Everyone

வாட்ஸ்அப் செயலியில் Delete for Everyone என்பதற்குப் பதிலாக Delete for me என்பதை மட்டும் கொடுத்துவிட்டால் அதை உடனே Undo செய்து கொள்ளும் வசதியை அறிமுகம் செய்துள்ளது வாட்ஸ்அப் நிறுவனம்.

வாட்ஸ்அப் செயலியில் சில நேரங்களில் நாம் எழுத்துப் பிழையுடன் மெசேஜ் அனுப்பி விடுவோம் அல்லது பிரைவேட் சாட்டில் மெசேஜ் அனுப்புவதற்குப் பதிலாக குரூப்பில் அந்த மெசேஜை அனுப்பிவிடுவோம்.

இப்படித் தவறுதலாக மெசேஜ் அனுப்பப்பட்ட பிறகு அதைக் கவனித்து உடனே அதை நீக்க முயற்சிப்போம்.

ஆனால் வாட்ஸ்அப் சாட்டில் நாம் தவறுதலாக அனுப்பிய மெசேஜை மொத்தமாக அழிக்க நினைத்து Delete for Everyone என கொடுப்பதற்குப் பதிலாக Delete for me என்பதைக் கொடுத்துவிட்டால், அந்த மெசேஜ் நமக்கு மட்டும் அழிந்துவிடும்.

மறு முனையில் உங்களது மேசேஜை பெற்றவர் அதனை எளிமையாகப் பார்க்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இனி நீங்கள் Delete for Everyone என்பதற்குப் பதிலாக Delete for me என்று கொடுத்துவிட்டால் கவலைப்படத் தேவை இல்லை.

அதாவது நீங்கள் Delete for Everyone என்பதற்குப் பதிலாக Delete for me கொடுத்துவிட்டால் அதை உடனே Undo செய்து கொள்ளும் வசதி தான் தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

பாகனா

Recommended For You

About the Author: admin