பங்களாதேஷ் நாடாளுமன்ற உறுப்பினர் இந்தியாவில் கொலை

பங்களாதேஷின் ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் காணாமல் போயிருந்த நிலையில், ஒரு வாரத்திற்குப் பின்னர், இந்தியாவின் கொல்கத்தாவில் கொலை செய்யப்பட்டுள்ளதாக அந்த நாட்டு உள்துறை அமைச்சர் அசாதுஸ்மான் கான் தெரிவித்துள்ளார்.

அவாமி லீக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி பங்களாதேஷின் எல்லை மாவட்டமான ஜெனிதக் தொகுதியில் தொடர்ந்து மூன்றாவது முறையாக வெற்றி பெற்ற அன்வருல் அசிம் அனார் (56 வயது) மருத்துவ சிகிச்சைக்காக இந்தியா சென்றுள்ளார்.

இந்த நிலையில், கடந்த 13 ஆம் திகதி அன்வருல் அசிம் காணாமல் போனதாக அவரது உறவினர்கள் கொல்கத்தாவில் உள்ள பராநகர் பொலிஸ் நிலையத்தில் கடந்த 18ஆம் திகதி முறைப்பாடு செய்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, கொல்கத்தாவின் நியூ டவுனில் கைவிடப்பட்ட வீடொன்றில் இருந்து நேற்றைய தினம் புதன்கிழமை காலை அவரின் உடல் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் பங்களாதேஷைச் சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன், இறப்புக்கான காரணம் கண்டறியப்படாத நிலையில், பிரேத பரிசோதனையின் பின்னர் அனாரின் உடல் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் அன்வருல் அசிம் அனாரின் மறைவுக்கு பங்களாதேஷ் பிரதமர் மற்றும் சட்டமியற்றுபவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Recommended For You

About the Author: admin