ஸ்லோவாக்கியா பிரதமரை இலக்கு வைத்து துப்பாக்கிப்பிரயோகம்

ஸ்லோவாக்கியா பிரதமர் Robert Fico மீது துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஸ்லோவாக்கியாவின் தலைநகரில் இருந்து வடகிழக்கில் சுமார் 150 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஹண்ட்லோவா நகரில் இவ்வாறு துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

இந்த நிலையில், காயமடைந்த பிரதமர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்த சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: admin