வேகமாக பரவும் டினியா தோல் நோய்: அவசர எச்சரிக்கை

டினியா எனப்படும் தோல்நோய் இளைஞர்களிடையே வேகமாக பரவி வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இறுக்கமான நைலோன் கலந்த ஆடைகளை அணிகின்றமையே இந்த தோல் நோய்க்கான காரணம் விசேட வைத்தியர் நயனி மாதாரசிங்க தெரிவித்தார்.

டினியா எனப்படும் இந்த நோய் பூஞ்சை தொற்றினால் பரவுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நோயிற்கு உரிய சிகிச்சை முறைமைகள் காணப்படுகின்ற போதிலும் முறையாக சிகிச்சையளிக்கப்படாமையால்

நோய்க் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மந்த நிலையை அடைந்துள்ளதாக வைத்தியர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இந்நிலையில் உரிய வைத்தியர்களிடம் இதற்கான சிகிச்சைகளை பெற்றுக்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: admin