நூற்றுக்கும் அதிகமான போதைப்பொருள் கடத்தல்காரர்கள் நாட்டை விட்டு தப்பியோட்டம்

யுக்திய மற்றும் அதனுடன் தெடர்புபட்ட போதைப்பொருள் ஒழிப்பு திட்டங்களால் பல வருடங்களாக போதைப்பொருள் கடத்தலில் மற்றும் விற்பனையில் ஈடுபட்டு வந்த நூற்றுக்கும் அதிகமான பிரதான போதைப்பொருள் கடத்தல்காரர்கள் வியாபாரங்களிலிருந்து நீங்கி நாட்டை விட்டு தப்பியோடியுள்ளதாக புலனாய்வு பிரிவுக்கு தகவல்கள் கிடைத்துள்ளன.

மேல் மாகாணம் மற்றும் தென் மாகாணத்தை இலக்காகக் கொண்டு பல வருடங்களாக இவர்கள் போதைப்பொருள் வியாபாரங்களில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

விசேட அதிரடிப்படை மற்றும் பொலிஸ் புலனாய்வுப் பிரிவுக்கு இவர்களின் பெயர் மற்றும் ஊர் தொடர்பிலான பட்டியல் கிடைக்கப்பெற்றுள்ள நிலையில் அவர்களை கைது செய்ய முயற்சிக்கும் சந்தர்ப்பத்தில் அவர்கள் நாட்டிலிருந்து தப்பியோடியுள்ளமை தெரியவந்துள்ளது.

இவர்களுள் அநேகமானோர் வெளிநாடுகளில் இருப்பதாக தெரிய வந்துள்ளது.

போதைப்பொருள் கடத்தல் மற்றும் வியாபாரத்தை விட்டு விலகியே அவர்கள் இவ்வாறு வெளிநாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, அண்மைய தினங்களாக தொடர்ந்து நடைபெற்று வரும் சுற்றிவளைப்புகள் காரணமாக இவர்கள் போதைப்பொருள் கடத்தல் மற்றும் வியாபாரத்தை விட்டு விலகியுள்ளதாக தெரியவந்துள்ளது.

விசேட அதிரடிப்படையினர் மீது போதைப்பொருள் வியாபாரிகள் பெரும் அச்சத்தில் இருப்பதாகவும் தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Recommended For You

About the Author: admin