இந்திய வம்சாவளி விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸின் பயணம் ஒத்திவைப்பு:

விண்வெளியில் உள்ள சர்வதேச விண்வெளி நிலையத்தில் 322 நாட்கள் தங்கியிருக்கும் வேலைத்திட்டத்தில் இந்திய வம்சாவளியைச் சோ்ந்த அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் (58), 3ஆவது முறையாக பயணம் செய்வார் என அறிவிக்கப்பட்டது.

ஆனாலும், நேற்று செவ்வாய்க்கிழமை விண்வெளிக்குச் செல்லவிருந்த நிலையில், கடைசி நேரத்தில் பயணம் ஒத்திவைக்கப்பட்டது.

இதனால் பெரிதும் எதிர்பார்ப்பில் காத்திருந்த அனைவருக்கும் அது ஏமாற்றத்தை கொடுத்தது.

விண்ணில் செலுத்தப்படவிருந்த ஓடம்

அமெரிக்காவின் போயிங் நிறுவனம் ‘ஸ்டாா்லைனா்’ என்ற விண்வெளி ஓடத்தை அண்மையில் உருவாக்கியது.

இதனைத் தொடர்ந்து அந்த ஓடம் சோதனை முறையில் வெற்றியடைந்ததுடன் முதல்முறையாக செவ்வாய்க்கிழமை விண்ணில் செலுத்தப்படவிருந்தது.

ஃபுளோரிடா மாகாணத்தின் கேப் கனாவெரல் ஏவுதளத்திலிருந்து ஏவப்படவிருந்த ஸ்டாா்லைனரில் சுனிதா வில்லியம்ஸுடன் மற்றுமொரு விண்வெளி ஆராய்ச்சியாளரான பட்ச் வில்மோரும் இதில் செல்லவிருந்தார்.

கோவிஷீல்ட் தடுப்பூசி பெற்றுள்ளதாக பரபரப்பு செய்தி பரவல்

சுனிதா வில்லியம்ஸ் கோவிஷீல்டு தடுப்பூசிபெற்றுள்ளதாகவும் இதனால் அவர் விண்வெளி பயணத்தை இடைநிறுத்திவிட்டதாகவும் பல ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

ஆனால், ஒட்சிசன் குழாயில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சுனிதா வில்லியம்ஸின் விண்வெளி பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக நாசா உத்தியோகபூர்வமாக அறிவித்தது.

இந்த நிலையில், புதிதாக ஒட்சிசன் குழாய் மாற்றப்பட்டு எதிர்வரும் 10ஆம் திகதி சுனிதா வில்லியம்ஸ் தனது விண்வெளி பயணத்தை வெற்றிகரமாக மேற்கொள்வார் என்று நாசா தெரிவித்துள்ளது.

விண்வெளி நிலையத்தில் 322 நாள்கள் தங்கியிருக்கும் திட்டத்தில் இந்திய வம்சாவளியைச் சோ்ந்த அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் (58), 3ஆவது முறையாக பயணம் செய்வார் என அறிவிக்கப்பட்டது.

ஆனாலும், நேற்று செவ்வாய்க்கிழமை விண்வெளிக்குச் செல்லவிருந்த நிலையில், கடைசி நேரத்தில் பயணம் ஒத்திவைக்கப்பட்டமையும் குறிப்பித்தக்கது.

Recommended For You

About the Author: admin