“அரசியல் கட்சியில் இருந்து தமிழ் பொது வேட்பாளர் வேண்டாம்”

ஜனாதிபதித் தேர்தலில் தமிழர் தரப்பிலிருந்து ஒருவரை பொது வேட்பாளராக களமிறக்குவது தொடர்பில் வடக்கு கிழக்கு மாகாணங்களிலுள்ள சிவில் அமைப்புக்கள் மற்றும் அரசியல் கட்சிகள் இணைந்து யாழில் கலந்துரையாடியுள்ளனர்.

சிவில் அமைப்புக்களின் ஏற்பாட்டில் யாழ் நகரிலுள்ள ஹோட்டலொன்றில் இன்று மாலை 3 மணியளவில் ஒன்றுகூடிய சிவில் சமூகப் பிரதிநிதிகளும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும் சுமார் நான்கு மணித்தியாலங்கள் பொது வேட்பாளர் தொடர்பில் ஆராய்ந்தனர்.

இதன் போது முதலில் தமிழர் தரப்பில் இருந்து ஒருவரை பொது வேட்பாளராக நிறுத்துவது தொடர்பிலும் அவ்வாறு நிறுத்த வேண்டியதன் அவசியம் குறித்தும் கலந்துரையாடப்பட்டதுடன் சில இணக்கப்பாடுகளும் பொதுவாக ஏற்படுத்தப்பட்டுள்ளன.

பொது வேட்பாளரை நிறுத்துவது தொடர்பில் வட கிழக்கிலுள்ள சிவில் சமூக அமைப்புக்களும் பல கட்சிகளும் தொடர்ச்சியான கலந்துரையாடல்களை நடாத்தி வருகின்ற அதேவேளையில் தமிழரசுக் கட்சி மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஆகிய இரண்டு கட்சிகளும் இதுவரை காலமும் இக் கூட்டங்களில் கலந்து கொள்ளாமல் இருந்து வந்தன.

இந் நிலையில் இந்தப் பொது வேட்பாளர் தொடர்பான இன்றைய கூட்டத்தில் தமிழரசுக் கட்சியும் இணைந்து கோண்டதுடன் அக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசாவும் கட்சியின் ஏனைய சில முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஆனாலும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி இன்றும் கலந்து கொள்ளவில்லை. அந்தக் கட்சியினர் ஐனாதிபதித் தேர்தலை பகிஸ்கரிக்க வேண்டுமென்றே தொடர்ந்தும் கோரி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும் இன்றைய கூட்டத்தின் போது தமிழர் தரப்பில் இருந்து ஒருவரை பொது வேட்பாளராக நிறுத்த வேண்டிய அவசியத்தையும் அனைவரும் இணைந்த்தாக இதற்கு பொதுக்குழு ஒன்றை அமைக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் ஆராயப்பட்டிருந்த்து.

இதற்கமைய பொதுக்குழு அமைப்பதற்கு தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா இரண்டு வார கால அவகாசம் கோரியிருந்த்தாகவும் அதனால் இரண்டு வார காலத்திற்கு இதனை ஒத்தி வைத்துள்ளதாகவும் தெரிய வருகின்றது.

இக் கூட்டத்தில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் உள்ள பல்வேறு சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் தமிழ்த் தேசியப் பரப்பிலுள்ள தமிழ்த் தேசிய மக்கள முன்னணியைத் தவிர ஏனைய அனைத்துக் கட்சிகளினதும் தரைவர்கள் மற்றும் அதன் பிரதிநிதிகள் பாராளுமன்ற உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

Recommended For You

About the Author: admin