கிராமத்தை கைப்பற்றிய ரஷ்ய இராணுவம்: போராடும் உக்ரேனியப் படைகள்

கிழக்கு உக்ரைனில் ஓக்கரிடைன் (Ocheretyne) கிராமத்தை ராணுவம் கைப்பற்றியதாக ரஷ்யா இன்று ஞாயிற்றுக்கிழமை அறிவித்துள்ளது.

அவ்டிவ்காவிலிருந்து வடமேற்கே 15 கிலோமீட்டர் தொலைவில் ஓக்கரிடைன் (Ocheretyne) கிராமம் அமையப்பெற்றுள்ளது.

கிழக்கு உக்ரைனில் உள்ள மற்றுமொரு கிராமத்தை கைப்பற்றியதாக மாஸ்கோ கடந்த வியாழக்கிழமை (02)அறிவித்தது.

அண்மைய வாரங்களில் ரஷ்ய படைகள் தொடர்ந்தும் முன்னேறி வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மாஸ்கோ இரண்டு ஆண்டுகளுக்கும் மேலான தாக்குதலில் மிகவும் கொடூரமான போர்களின் சிலவற்றிற்குப் பிறகு பெப்ரவரி மாதத்தில் அவ்டிவ்காவைக் கைப்பற்றியது.

இந்நிலையில் தற்போது ரஷ்ய படைகள் முன்னேறி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

அமெரிக்க விநியோகங்களில் தாமதம் ஏற்பட்டதால் உக்ரேனியப் படைகள் வெடிமருந்து பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளமையும் சுட்டிக்காட்டத்தக்கது.

நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட பெருமளவிலான அமெரிக்க ஆயுதங்களின் வருகைக்கு முன்னதாக, போராடும் உக்ரேனியப் படைகளுக்கு எதிராக ரஷ்யா முன்னேறி வருகின்றது.

Recommended For You

About the Author: admin