வெண்பூசணி சாறு பயன்கள்

ஆரோக்கியமான உணவுப் பொருட்களை நாம் நம்முடைய அன்றாட உணவு பழக்கமாக உட்கொள்ளும் பொழுது நம்முடைய உடலுக்கு பல அற்புதமான நன்மைகள் ஏற்படும். நன்மைகளோடு மட்டுமல்லாமல் பல நோய்களையும் வராமல் தடுக்கும். இருக்கும் நோய்களையும் கட்டுப்படுத்தும். அந்த வகையில் இன்றைய ஆரோக்கியம் குறித்த பதிவில் வெண்பூசணி சாறை பற்றி தான் தெரிந்து கொள்ளப் போகிறோம்

வெண்பூசணி சாறை நாம் தினமும் காலையில் வெறும் வயிற்றில் அருந்துவதன் மூலம் நமக்கு பல நன்மைகள் ஏற்படும் என்று ஆராய்ச்சி பூர்வமாக கூறப்பட்டு இருக்கிறது. குளிர்ச்சி தன்மை மிகுந்ததாக திகழக்கூடிய வெண்பூசணியை சைனஸ் பிரச்சனை இருப்பவர்களும் சளி அடிக்கடி பிடிக்கும் என்று கூறுபவர்களும் சற்று கவனத்துடன் சாப்பிட வேண்டும். சரி இப்பொழுது வெண்பூசணியை நாம் சாப்பிடுவதால் நமக்கு ஏற்படக்கூடிய நன்மைகளைப் பற்றி தெரிந்து கொள்வோம்.

வெண்பூசணியின் சதைப்பகுதியை தான் நாம் பொதுவாக அரைத்து சாறெடுத்து குடிப்போம். ஆனால் வெண்பூசணியின் விதைகளிலும் நமக்கு பல நன்மைகள் இருக்கிறது. அதனால் சாறு எடுக்கும் பொழுது வெண்பூசணியில் இருக்கக்கூடிய கடினமான தோல் பகுதியை மட்டும் நீக்கிவிட்டு அதன் விதைகளோடு சேர்த்து சாறு எடுத்து வடிகட்டி குடிப்பது மிகவும் நல்லது.

தினமும் வெண்பூசணி சாறை நாம் குடிப்பதன் மூலம் நம்முடைய மூளை மிகவும் சுறுசுறுப்பாக வேலை செய்யும். படிக்கும் குழந்தைகளுக்கு தினமும் வெண்பூசணி சாறு தருவதன் மூலம் சிறந்த மூளை திறனை பெற முடியும். ஆண்களுக்கும் பெண்களுக்கும் இருக்கக்கூடிய இனப்பெருக்கம் தொடர்பான பிரச்சனைகள் அனைத்தும் நீங்குவதற்கு இந்த வெண்பூசணி சாறு மிகவும் உதவி புரிகிறது. உடல் சூட்டை தணிக்கும் ஆற்றல் மிக்க இந்த வெண்பூசணி சாறை பெண்கள் தொடர்ச்சியாக எடுக்கும் பொழுது உடல் சூட்டினால் ஏற்படக்கூடிய வெள்ளைப்படுதல், அதிக அளவு ரத்தப்போக்கு போன்றவை கட்டுக்குள் வரும்.

வெண்பூசணி சாறு கட்டிகளை கரைக்கும் தன்மை உடையது. மேலும் கட்டிகள் உருவாகாமல் பார்த்துக் கொள்ளும் என்பதால் புற்றுநோய் செல்களை வளர விடாமல் தடுக்கும் ஆற்றல் இதற்கு உள்ளது. வெண்பூசணி சாறை தினமும் நாம் எடுத்துக் கொள்வதன் மூலம் டைப் 2 நீரிழிவு நோய் கட்டுக்குள் வரும். இதில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருக்கிறது.

மேலும் இதயத்திற்கு ஆரோக்கியத்தை தரக்கூடியது. சிறுநீரகத்தை வலுப்பெற செய்கிறது. மேலும் சிறுநீரகம் தொடர்பான அனைத்து பிரச்சினைகளையும் சரி செய்து கழிவு நீரை வெளியேற்றுவதற்கு உதவுகிறது. உடல் எடையை குறைப்பதற்கு மிகவும் ஏற்ற பானமாக வெண்பூசணி சாறு திகழ்கிறது. இதில் அதிக அளவு நார்ச்சத்து இருப்பதால் ஜீரண சக்தியை அதிகரித்து மலச்சிக்கலை தவிக்கிறது.

மேலும் இதில் குளிர்ச்சி தன்மை அதிகம் இருப்பதால் மூலம் தொடர்பான பிரச்சனைகள் இருப்பவர்களுக்கு அரு மருந்தாக திகழ்கிறது. வெண்பூசணி சாறை நாம் தினமும் அருந்தி வருவதன் மூலம் நமக்கு ஏற்படக்கூடிய மன அழுத்தம் குறையும். பொடுகு பிரச்சனை இருப்பவர்கள் இந்த வெண்பூசணி சாறை தலையில் தடவுவதன் மூலம் பொடுகு பிரச்சனை முற்றிலும் நீங்குவதோடு தலையில் ஏற்படக்கூடிய அரிப்பையும் கட்டுப்படுத்த உதவுகிறது. உடலில் அதிக அளவில் எரிச்சல் இருப்பவர்கள் இந்த வெண்பூசணி சாறை உடலில் தேய்த்து வர உடல் எரிச்சல் குறையும்.

மிகவும் எளிதில் விலை மலிவாக கிடைக்கக் கூடிய இந்த வெண்பூசணியை நாமும் பயன்படுத்தி பல நன்மைகளை பெறுவோம்.

 

 

 

Recommended For You

About the Author: admin