
பாரிஸில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் அறுவர் காயமடைந்துள்ளனர்.
வடக்கு பாரிஸின் புறநகர்ப் பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய துப்பாக்கி பிரயோகம் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
காரில் வருகைத்தந்த இருவர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதையடுத்து தப்பிச் சென்றுள்ளனர்.
காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் மூவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் அந்நாட்டு பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.