பிரித்தானியாவில் எதிர்க்கட்சியான தொழிற்கட்சி, வடக்கு இங்கிலாந்தின் நாடாளுமன்ற இடைத் தேர்தலில் வெற்றி பெற்று, உள்ளாட்சித் தேர்தலில் பல இடங்களை கைப்பற்றியுள்ளது.
இதனால் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியின் பிரதமரான ரிஷி சுனக்குக்கு கடும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
இவ்வாண்டு தேசிய அளவில் தேர்தல் நடக்கவிருப்பதால் இரண்டு நாட்களாக உள்ளாட்சித் தேர்தலில் முடிவை அரசியல் கட்சிகள் உன்னிப்பாகக் கவனித்து வந்தன.
தொழிற்கட்சியின் வெற்றியால் அக்கட்சியின் தலைவர் கியர் ஸ்டார்மர், கன்சர்வேட்டிவ் கட்சியின் 14 ஆண்டுகள் ஆட்சிக்கு முடிவுகட்டுவார் என அக்கட்சியினர் நம்புகின்றனர்.
இங்கிலாந்து முழுவதும் 2,000க்கும் மேற்பட்ட இடங்களுக்கான உள்ளாட்சித் தேர்தலில் நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை நடந்தது. இதில் லண்டன் மேயர் உள்ளிட்ட முக்கிய பதவிகளும் உள்ளடங்கும்.
தொழிற்கட்சி வேட்பாளரான கிறிஸ் வெப், பிளாக்பூல் நாடாளுமன்றத் தொகுதியில் 10,825 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். கன்சர்வேட்டிவ் கட்சியின் வேட்பாளர் 3,218 வாக்குகளைப் பெற்று இரண்டாவது இடத்துக்கு வந்துள்ளார்.