சிவனொளிபாதமலை பருவகாலம் இம்மாத இறுதியில் நிறைவடையவுள்ள நிலையில் உள்ளூர் சுற்றுலாப் பயணிகளின் வருகையை மட்டுப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, உள்ளூர் சுற்றுலா பயணிகள் சிவனொளிபாதமலைக்குள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
அரச அதிகாரிகளுக்கு முன்னோக்கி செல்லும் வழிகளை அறிவிக்கும் விஷேட கலந்துரையாடல் விகாராதிபதி பெங்கமுவே தம்மதின்ன நஹிமி தலைமையில் நேற்று வெள்ளிக்கிழமை நல்லதண்ணி கிராம சேவை அலுவலகத்தில் இடம்பெற்றது.
இதற்கமைய விடுமுறை நாட்களில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மாத்திரம் சிவனொளிபாதமலைக்கு செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை,சுற்றுலா பயணிகள் சிகிரியா சின்ஹா பாதாவிலிருந்து பாறையின் உச்சிக்கு செல்ல தற்போதுள்ள படிக்கட்டுப் பாதையை இரட்டைப் பாதையாக மாற்றுவதற்கு மத்திய கலாச்சார நிதியம் திட்டமிட்டுள்ளது.
மேலும், சிகிரியாவில் தற்போதுள்ள சிங்க கால் பாதைக்கு மேலதிகமாக மற்றுமொரு வீதியும் தயார் செய்யப்பட்டுள்ளதாக மத்திய கலாசார நிதியத்தின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் காமினி ரணசிங்க தெரிவித்தார்.
உகுல்கல அருகிலிருந்து சிங்க பாதைவரை இரு வீதிகளை தயார்படுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த இரு வீதிகளும் நுழைவு மற்றும் வெளியேறும் வகையில் தனித்தனியாக அமைக்கப்படும் என்றும் பேராசிரியர் மேலும் தெரிவித்துள்ளார்.