வயிறு வலியால் அவதிப்பட்ட சிறுவனை மருத்துவமனையில் சேர்த்த நிலையில், வயிற்றிலிருந்து 1 கிலோ அஸ்காரிஸ் புழுக்கள் இருந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வயிறு வலியால் துடித்த சிறுவன்
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள மருத்துவமனையில் 6 வயது சிறுவன் வயிற்று வலி காரணமாக அனுமதிக்கப்பட்டான்.
இதையடுத்து மருத்துவர்கள் சிறுவனை பரிசோதித்த பின்பு எக்ஸ்ரே எடுத்துள்ளனர். அப்போது சிறுவனின் சிறுகுடல் அடைக்கப்பட்டிருப்பதைக் கண்ட மருத்துவர்கள் உடனே அறுவை சிகிச்சை செய்வதற்கு முடிவு செய்தனர்.
வயிற்றில் இருந்த புழு
பின்னர் கடந்த சனிக்கிழமை மருத்துவர்கள் நடத்திய அறுவை சிகிச்சையில் சிறுகுடலில் அஸ்காரிஸ் புழுக்கள் இருந்துள்ளது. இதையடுத்து சிறுகுடலில் இருந்த புழுக்களை மருத்துவர்கள் அகற்றினர்.
சிறுவனின் சிறுகுடலில் இருந்து சுமார் 1 கிலோ அளவிலான அஸ்காரிஸ் புழுக்கள் அகற்றப்பட்டது. தற்போது சிறுவன் மருத்துவர்களின் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளான்.
புழுக்கள் இருந்தால் ஏற்படும் அறிகுறி
தற்போது உடல்நிலை நன்றாக இருக்கும் சிறுவனை மருத்துவர்கள் கண்காணித்து வரும் நிலையில், சில தகவல்களையும் பகிர்ந்து வருகின்றனர்.
வயிற்றில் அஸ்காரிஸ் புழுக்கள் இருந்தால் வயிற்று வலி, வாந்தி, குமட்டல், வயிற்றுபோக்கு, இருமல் புழுக்கள் இடம்பெயர்வதால் ஏற்படும் அறிகுறிகள் என்று அவர் தெரிவித்துள்ளார்.
குடலில் அதிக எண்ணிக்கையிலான புழுக்கள் இருந்தால், உங்களுக்கு வயிற்று வலி, சோர்வு, வாந்தி மற்றும் எடை இழப்பு அல்லது ஊட்டச்சத்து குறைபாடு இருக்கலாம் என மருத்துவர் தெரிவித்துள்ளார்.