பாடலாசிரியர் கபிலனின் மகள் தூரிகையின் தற்கொலை முடிவுக்கு என்ன காரணம் என போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது.
கவிஞர் கபிலன்
தமிழ் சினிமாவில் புகழ்பெற்ற பாடலாசிரியராக வலம் வருபவர் கபிலன். கடந்த 2001ம் ஆண்டு விக்ரம் நடிப்பில் வெளியான் தில் படத்தின் மூலம் திரையுலகில் பாடலாசிரியராக அறிமுகமானார்.
அப்படத்தில் இடம்பெறும் உன் சமையல் அறையில் என்கிற பாடல் தான் கபிலன் எழுதிய முதல் பாடல். அப்பாடல் இன்றளவும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்துள்ளது என்றால் அதற்கு கபிலனின் வரிகளும் ஒரு முக்கிய காரணம்.
கமலின் தசவதாரம் படத்தில் ஒரு சிரிய வேடத்தில் நடித்து தன்னுள் உள்ள நடிப்புத் திறமையையும் வெளிப்படுத்தி இருந்தார்.
கபிலன் மகள் தூரிகை
கவிஞர் கபிலனுக்கு தூரிகை என்ற மகள் உள்ள நிலையில், இவருக்கு வயது 28 ஆகியிருந்தது. எழுத்தாளராகவும், ஆடை வடிவமைப்பாளராகவும் இருந்து வரும் மகளை மிகவும் துணிச்சலான பெண்ணாகவே கபிலன் வளர்த்திருந்தார்.
இந்நிலையில் தூரிகை நேற்று திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். பொலிசாரின் முதல் கட்ட விசாரணையில், தூரிகையை அவரது பெற்றோர் திருமணம் செய்துகொள்ளச் சொல்லி வற்புறுத்தியது தான் அவரின் தற்கொலை முடிவுக்கு காரணம் என போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாம்.
மேலும் தூரிகை வேறு யாரையாவது காதலித்து வந்தாரா? அவரது காதலுக்கு குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்தார்களா? என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகின்றது.