இலங்கையில் வெளிப்படைத்தன்மை இல்லையா?

பிரதமர் தினேஸ் குணவர்தன் Boao Forum for Asia (BFA) மாநாட்டில் கலந்துகொள்வதற்காக கடந்த மார்ச் 25 முதல் 30 ஆம் திகதி வரை அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொண்டு சீனாவுக்கு சென்றிருந்தார்.

பிரதமரின் இந்த பயணத்தில் சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங், பிரதமர் லீ கியாங் உட்பட அந்நாட்டின் உயர் அரச அதிகாரிகளையும் சந்தித்திருந்தார்.

இலங்கைத் தீவு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிகளுக்கு சீனாவிடமிருந்து சில முதலீடுகள் மற்றும் உதவிகளை பெறும் நோக்கில் பிரதமரின் இந்த பயணம் அமைந்தது.

இதன்போது 9 ஒப்பந்தங்கள் இருநாடுகளுக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்டதுடன், இருநாட்டு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து ஆழமாக ஆராயப்பட்டது.

இந்த நிலையில், ஜனாதிபதி ஷி ஜின்பிங் உடனான சந்திப்பின் போது, சீன நிறுவனங்கள் இலங்கையில் முதலீடு செய்வதற்கு ‘நியாயமான மற்றும் வெளிப்படையான’ சூழலின் அவசியத்தை ஷி ஜின்பிங் வலியுறுத்தியுள்ளார்.

முடிவுகளை எடுக்கும் போது தேவையில்லாமல் ஏனைய நாடுகள் செல்வாக்கு செலுத்துவது குறித்து சீனா மகிழ்ச்சியடையவில்லை என்றும் ஷி ஜின்பிங் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, ஆராய்ச்சி கப்பல்களை அனுமதியளிப்பதில்லை என்ற முடிவு குறித்து , சீனப் பிரதமர் லீ கியாங், பிரதமர் தினேஸ் குணவர்தனவிடம் கவலை வெளிப்படுத்தியிருந்ததாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

Recommended For You

About the Author: admin