தமிழரசுக்கட்சிக்குள் ஏற்பட்டுள்ள முரண்பாடுகள் தற்போது தீர்வொன்றை தரக்கூடிய நிலையில் இல்லையெனெ அரசியல் ஆய்வாளர் சட்டத்தரணி சி.ஆ யோதிலிங்கம் தெரிவித்துள்ளார்.
“தற்போது கட்சிக்குள் பிரச்சினைகளை தீர்க்க முடியாமல் நீதிமன்றம் வரை பிரச்சினை எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. தமிழரசுக் கட்சியை பலவீனப்படுத்தினால் தமிழ் அரசியலே பலவீனப்படும் என்றொரு நிலைப்பாடே காணப்படுகின்றது.
இந்நிலையில் தமிழரசியலை பலவீனப்படுத்துவதற்காக திட்டமிட்டு பிளவுகள் ஏற்படுத்தப்படுகிறதா? என யோதிலிங்கம் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.
இதேவேளை, சம்பந்தன் மற்றும் சுமந்திரன் ஆகியோர் எதிர்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்கும் முயற்சியும் தமிழர்களைப் பலவீனப்படுத்துவதற்காக அமையும் என்றும் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழரசுக் கட்சிக்குள் சுமந்திரன் அணி மற்றொன்று சிறிதரன் அணியென இரு அணிகள் பிரிந்து பதவிக்காக பல்வேறு செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாட்டை நடத்தவிடாது நீதிமன்ற உத்தரவை சுமந்திரன் காய் நகர்த்துவதாக சந்தேகம் வெளியிடப்பட்டது.
எவ்வாறாயினும் தமிழ் அரசியல் பிரதிநிதிகளின் இவ்வாறான செயற்பாடுகளால் தமிழ் மக்களே பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழின அடக்குமுறைக்கு எதிரான செயற்பாடுகளுக்கு எதிராக தமிழ் கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் என்பதே தமிழ் மக்களின் எதிர்பார்ப்பாக அமைந்துள்ள நிலையில் ஆய்வாளர் யோதிலிங்கம் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.