பாற்பண்ணையாளர்கள் போராட்டம்: கண்டுகொள்ளாத அரசாங்கம்

மட்டக்களப்பு – மயிலத்தமடு – மாதவனை பிரதேசத்தில் சிங்கள விவசாயிகள் தமது மேய்ச்சல் நிலத்தை ஆக்கிரமித்து அரச ஆதரவுடன் மாடுகளை கொன்று குவித்தமைக்கு எதிராக பாற்பண்ணையாளர்கள் ஆரம்பித்துள்ள போராட்டம் 206ஆவது நாளாகவும் தொடர்கிறது.

கடந்த 9 மாதங்களில், சட்டவிரோத விவசாயிகளால் கிட்டத்தட்ட 1,750 பசுக்கள் கொல்லப்பட்டதாக பால் பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.

இந்த சம்பவங்களில் வாள்கள் அல்லது கூரிய ஆயுதங்களால் தாக்குதல், துப்பாக்கியால் சுடுதல், மின்சார வேலிகளில் சிக்கவைத்தல், கொக்கிகளை வழங்குதல், பொறிகளை அமைத்தல் போன்ற சம்பவங்கள் அடங்குவதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

2024ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் மாடுகளை துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பில் பொலிஸில் முறைப்பாடுகள் செய்யப்பட்ட போதும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

இது தொடர்பில் ஜனாதிபதி மற்றும் அரச அதிகாரிகளுக்கு தெரியப்படுத்திய போதும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என பால் பண்ணையாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

Recommended For You

About the Author: admin