பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பொதுமக்கள் பொருட்களை கொள்வனவு செய்வதற்காக செல்லும் போது திருடர்கள்,மோசடி செய்பவர்களிடம் இருந்து எச்சரிக்கையாக இருக்குமாறு பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.
போலி நாணயத் தாள்கள் புழக்கத்தில் இருப்பதால், நுகர்வோர் மற்றும் வர்த்தகர்கள் கவனமாக இருக்க வேண்டும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சுட்டிக்காட்டினார்.
மேலும், பண்டிகை நாட்களை முன்னிட்டு கிராமங்களுக்குச் செல்லுதல், உறவினர்கள், நண்பர்களுடன் சுற்றுலாப் பயணங்களில் ஈடுபடும் போது மது அருந்திவிட்டு வாகனங்களை செலுத்துவதை தவிர்க்குமாறும் பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பண்டிகைக் காலங்களில் நாடளாவிய ரீதியில் போக்குவரத்துச் சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படும் எனவும், பொதுப் போக்குவரத்துச் சேவைகளைப் பயன்படுத்தும் போது குடிபோதையில் வாகனம் செலுத்துபவர்கள் இருப்பின் 1969 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அறிவிக்குமாறும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
மேலும், போக்குவரத்து விதிகளை மீறும் சாரதிகள் தொடர்பில் மேற்குறிப்பிட்ட தொலைபேசி இலக்கங்களுக்குத் தெரியப்படுத்துமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.