900 ஆண்டுகள் பழைமையான தமிழ் கல்வெட்டு கண்டுபிடிப்பு!

சேலம் மாவட்டத்தின் பாணாபுரம் கிராமத்திற்கு அண்மையில் காணப்பட்ட விவசாய நிலத்திலிருந்துஇ 900 வருடங்கள் பழைமையான தமிழ் கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கல்வெட்டு எழுத்துகளை ஆய்வு செய்ததில் அது 12ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழ் எழுத்து பொறிக்கப்பட்ட கல்வெட்டு என்று கண்டறியப்பட்டது.

கொங்கு வீரபாண்டியன் ஸ்ரீ கிருஷ்ணாபுரத்து தலைவருக்கு, வாணாபுரம் (பாணாபுரம்) நகரை, தேவதானமாக கொடுத்த செய்தி இக்கல்வெட்டில் உள்ளது. கொடுத்தவர் அரசனாக இருக்கலாம் என்றும் கூறப்படுகின்றது.

கல்வெட்டில் வாணாபுரம் என்று உள்ளது தற்பொழுது பெயர் மருவி பாணாபுரம் என்று அழைக்கப்படுகிறது என்பதும் தெரியவந்தது.

Recommended For You

About the Author: admin