கனடாவில் 10 டொலர்களுக்கு காணி விற்பனை

உலகில் குறைந்த மக்கள் தொகை கொண்ட மற்றும் பாரிய நிலப்பரப்பை கொண்ட நாடுகளில் கனடாவும் ஒன்று.

மிகவும் செல்வந்த நாடாக உள்ள கனடாவில் மக்கள் மகிழ்ச்சியாக வாழ்கின்றனர். புலம்பெயர்ந்து செல்லும் மக்களையும் கனடா அரவணைத்துக் கொள்கிறது.

இவ்வாறான பின்புலத்தை கொண்ட நாட்டில் வாழும் மக்களுக்கு ஒரு மகழிச்சியான செய்தியொன்று வெளியாகியுள்ளது.

கனடாவில் ஒரு துண்டு காணி பத்து டொலர்களுக்கு விற்பனை செய்யப்பட உள்ளதாகவும் இவற்றை கொள்வனவு செய்ய மக்கள் கூடுதல் நாட்டம் காட்டுவதுமே இந்த செய்தி.

ஒன்றாரியோ மாகாணத்தின் கோச்ரென்ஸ் நகரில் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. கோச்ரென்ஸ் நகரின் மேயர் பீற்றர் பொலிடிஸ் இது குறித்து அறிவித்துள்ளார்.

நபர்கள் தங்களுக்கு விருப்பான காணித் துண்டை தெரிவு செய்து கொள்ள முடியும். அந்த காணி 10 டொலர்களுக்கு விற்பனை செய்யப்படும் என மேயர் அறிவித்துள்ளார்.

வீடு நிர்மானம் செய்வதற்கான கால வரையறை உள்ளிட்ட சில நிபந்தனைகளின் அடிப்படையில் பத்து டொலர்களுக்கு காணித் துண்டு விற்பனை செய்யப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

இந்தத் திட்டம் அறிவிக்கப்பட்டதன் பின்னர் சுமார் மூவாயிரம் தொலைபேசி அழைப்புக்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாக அவர் கூறுகிறார். நகரில் சுமார் 1500 காணித் துண்டுகள் 10 டொலர்களுக்கு விற்பனை செய்யப்பட உள்ளதாகவும் பீற்றர் பொலிடிஸ் தெரிவிக்கிறார்.

இலங்கையில் இருந்து கனடாவுக்கு புலம்பெயர்ந்து தமிழ் மக்கள் அதிகமாக வாழ்வது ஒன்றாரியோ மாகாணத்தில்தான். பெரும்பாலான புலம்பெயர் தமிழர்கள் இந்த காணித் துண்டுகளை கொள்வனவு செய்ய விண்ணப்பித்துள்ளதுடன், இந்த திட்டத்தையும் வரவேற்றுள்ளனர்.

Recommended For You

About the Author: admin