நம்பர் 1 இடத்தை இழந்தார் எலோன் மஸ்

உலகின் நம்பர் 1 செல்வந்தர்கள் தரவரிசையில் அமேசான் நிறுவனர் ஜெஃப் பெஸோஸ் (Jeff Bezos) எலோன் மஸ்க்கிடம் (Elon Musk) இருந்து மீண்டும் முதலிடத்தை கைப்பற்றியுள்ளார்.

செவ்வாயன்று (05) வெளியிடப்பட்ட ப்ளூம்பெர்க் பில்லியனர்கள் குறியீட்டின் படி இந்த தகவல்கள் உறுதிபடுத்தப்பட்டுள்ளன.‍

இருவரின் சொத்து மதிப்பு

ஜெஃப் பெஸோஸின் தற்போதைய சொத்து நிகர மதிப்பு 200 பில்லியன் அமெரிக்க டொலர்களாக உள்ளது.

அதே சமயம், எலோன் மஸ்க்கின் சொத்து நிகர மதிப்பு 198 பில்லியன் டொலர்களாக குறைந்துள்ளது.

கடந்த ஆண்டில் டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரி எலோன் மாஸ்க் சுமார் 31 பில்லியன் டொலர்களை இழந்தார், அதே நேரத்தில் அமேசான் நிறுவனர் ஜெஃப் பெஸோஸ் 23 பில்லியன் டொலர்களை ஈட்டியுள்ளதாக அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

2021 இல் நம்பர் 1 செல்வந்தர் ஆனார் எலோன் மஸ்க்

2021 ஜனவரியில் எலோன் மஸ்க் 195 பில்லியன் அமெரிக்க டாலர் நிகர சொத்து மதிப்புடன் பெசோஸை வீழ்த்தி முதன் முறையாக உலகின் நம்பர் 1 செல்வந்தர் ஆனார்.

இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் 2023 மே மாதம், உலகின் நம்பர் 1 செல்வந்தனர் என்ற பட்டத்தை மீண்டும் பெறுவதற்காக, ஆடம்பர பிராண்டான லூயிஸ் உய்ட்டனின் தாய் நிறுவனமான LVMH இன் தலைமை நிர்வாகியான பெர்னார்ட் அர்னால்ட்டை, எலோன் மாஸ்க் பதவி நீக்கம் செய்தார்.

2022 டிசம்பரில் எலோன் மாஸ்கின் டெஸ்லா மதிப்பு கடுமையாக சரிந்தபோது ஆர்னால்ட் முதன்முதலில் மஸ்க்கை முந்தினார்.

உலகின் நம்பர் 1 செல்வந்தர்கள் தரவரிசை

அண்மைய ப்ளூம்பெர்க் பில்லியனர்கள் குறியீட்டின்படி, அர்னால்ட்டின் நிகர சொத்து மதிப்பு 197 பில்லியன் அமெரிக்க டொலர்களாக உள்ளது.

குறித்த தரவரிசையில் அவர் மூன்றாம் இடத்தில் உள்ளார்.

அதைத் தொடர்ந்து மெட்டா தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் 179 பில்லியன் அமெரிக்க டொலர்கள் சொத்து மதிப்புடன் நான்காவது இடத்திலும், மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸ் 150 பில்லியன் அமெரிக்க டொலர் சொத்து மதிப்புடன் ஐந்தாவது இடத்திலும் உள்ளனர்.

இதனிடையே ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி மற்றும் அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானி ஆகியோர் முறையே 11 மற்றும் 12 ஆவது இடங்களில் உள்ளனர்.

அம்பானியின் நிகர சொத்து மதிப்பு 115 பில்லியன் டொலர்களாகவும், அதானியின் சொத்து மதிப்பு 104 பில்லியன் டொலர்களாகவும் உள்ளமை குறிப்பிடத்கத்கது.

ito

Recommended For You

About the Author: admin