கையடக்கத் தொலைபேசியில் ஒரு சில சமயங்களில் நமக்கு எரிச்சலூட்டும் விதமாக கூகுள் மெசேஜஸ்ஸில் இருந்து நோட்டிஃபிகேஷன்கள் வரும்.
அந்த நோட்டிஃபிகேஷன்களை எப்படி சைலண்ட் மோடில் வைக்கலாம் என்று பார்ப்போம்.
நோட்டிஃபிகேஷன்களை மியூட் செய்வது எப்படி?
முதல் படி – உங்களது கையடக்கத் தொலைபேசியில் உள்ள கூகுள் மெசேஜ் அப்ளிகேஷனை திறந்து அதில் எந்த சாட்டின் நோட்டிபிகேஷனை சைலண்ட் மோடில் வைக்க விரும்புகிறீர்களோ அந்த குறிப்பிட்ட சாட்டிற்கு செல்ல வேண்டும்.
இரண்டாவது படி – ஸ்க்ரீனின் வலது மூலையில் உள்ள மூன்று புள்ளிகள் கொண்ட ஐகோனை க்ளிக் செய்யவும்.
மூன்றாவதாக – தனி நபர் சாட் அல்லது குரூப் சாட் என்ற அடிப்படையில் உங்களுக்கு இரண்டில் ஒரு ஆப்ஷன் காண்பிக்கப்படும். Group details or Details.
நான்காவது படி – இந்த ஆப்ஷனில் நோட்டிபிகேஷன்ஸ் பிரிவை தெரிவு செய்யுங்கள்.
இறுதியாக – இந்த பிரிவில் silent என்ற ஆப்ஷன் காண்பிக்கப்படும். இப்போது குறிப்பிட்ட செட்டிங்கில் எந்தவொரு சத்தமோ வைப்ரேஷனோ வராது.