இலங்கை மின்சார சபை கடந்த 2023ஆம் ஆண்டில் அதிக இலாபத்தை ஈட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மின்சார கட்டணங்களை என்றுமில்லாத அளவிற்கு அதிகரித்தமையே இதற்கான காரணம் எனவும் தெரியவந்துள்ளது.
கடந்த 2023ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் திகதியன்று வெளியடப்பட்ட கணக்காய்வு அறிக்கையின்படி, சுமார் 61.2 பில்லியன் ரூபாவை இலங்கை மின்சார சபை வருமானமாகப் பெற்றுள்ளது.
ஏனைய முதலீடுகளையும் சேர்த்து 75.7 பில்லியன் ரூபாவை ஈட்டியிருந்தது.
இந்நிலையில், கடந்த ஒக்டோபர் மாதம் முதல் 18 வீத கட்டண அதிகரிப்பினால் 21 பில்லியன் ரூபாய் இலாபமாக பெற்றுள்ளது.
பெரும்பாலும் கடந்த ஒக்டோபர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரையிலான காலப்பகுதியிலேயே இவ்வாறு அதிக இலாபம் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நீர்மின் நிலையங்கள் ஊடாக போதுமான மின்சாரம் உற்பத்தி செய்த காரணத்தினால், ஏனைய நிலக்கரி மற்றும் எண்ணை ஆகியவற்றைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் உற்பத்தி குறைந்தமையும் இலாபமீட்டுவதற்கு காரணமாக அமைந்துள்ளதாக அறிய முடிகின்றது.