எகிப்து தலைநகர் கெய்ரோவின் புறநகர் பகுதியில் உள்ள நைல் நதியில் நேற்று படகு ஒன்று மூழ்கியதில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
கிரேட்டர் கெய்ரோவின் ஒரு பிரதேசமான கிசாவில் உள்ள மான்ஷாட் எல் கான்டர் நகரில் இந்த விபத்து நடந்துள்ளது.
இந்த படகில் பயணம் செய்யும் அனைவரும் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்கள் கட்டிட நிர்மாண தளத்தில் வேலை செய்து வந்த தொழிலாளர்கள்.
உயிர் தப்பிய 5 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைகளின் பின்னர் வெளியேறியுள்ளனர்.
படகு விபத்துக்கான காரணம் தெரியவில்லை. இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 2 லட்சம் எகிப்திய பவுண்டுகளும், காயமடைந்த 5 பேருக்கு தலா 20 ஆயிரம் பவுண்டுகளும் இழப்பீடாக வழங்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.
எகிப்தின் நைல் மேல் டெல்டா பகுதியில் வசிக்கும் மக்கள் பெரும்பாலும் தமது அன்றாட தேவைகளுக்காக படகுகளில் பயணம் செய்து வருகின்றனர்.
படகுகள் சரியான முறையில் பராமரிக்கப்படுவதில்லை என்பதால், நைல் நதியில் அடிக்கடி இப்படியான விபத்துக்கள் ஏற்பட்டு வருகின்றன.
ஏற்கனவே நடந்த விபத்துக்களில் பலர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.