போலி மருந்து விற்பனை- உஸ்பெகிஸ்தான் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

இந்தியாவின் சிறுவர் மருந்து உற்பத்தி நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரி உள்ளிட்டவர்களுக்கு உஸ்பெகிஸ்தான் உயர் நீதிமன்றம் தண்டனை வழங்கியுள்ளது.

குழந்தைகளுக்கான இருமல் மருந்து உற்பத்தி அதிகளவு கலப்படத்தை ஏற்படுத்தி 65 குழந்தைகளின் மரணத்திற்கு காரணமானவர்களுக்கே இவ்வாறு சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

கடந்த ஆறு மாதங்களாக இடம்பெற்ற வழக்கின் தீர்ப்பு நேற்று திங்கட்கிழமை வழங்கப்பட்டிருந்தது.

போலி மருந்து உற்பத்தியுடன் தொடர்புடைய 23 பேருக்கு இரண்டு தொடக்கம் 20 வருடங்கள் சிறைத்தண்னை வழங்கப்பட்டுள்ளது.

அந்த வகைளில் இந்தியர் ஒருவர் உள்ளிட்டவர்களுக்கு தண்டை வழங்கப்பட்டுள்ளது. மோசடி, கவனயீனம், இலஞ்ச ஊழல் ஆகிய குற்றச்சாட்டின் கீழ் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

மேலும் போலி மருந்து உற்பத்திகளை இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்கிய சுங்கப்பிரிவினைச் சேர்ந்த உயர் அதிகாரிகளுக்கும் சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

மேலும் போலி மருந்து காரணமாக உயிரிழந்த 68 குழந்தைகளின் பெற்றோருக்கு சுமார் 80,000 அமெரிக்க டொலர்களை மருந்து உற்பத்தி நிறுவனம் மற்றும் குற்றவாளிகள் பிரித்து வழங்க வேண்டும் எனவும், போலி மருந்து காரணமாக அங்கவீனமுற்ற 04 குழந்தைகளுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: admin