உங்கள் வாட்ஸ் அப் பாதுகாப்பாக இருக்க வேண்டுமா

வாட்ஸ் அப் பொதுவாக எண்ட் டூ எண்ட் என்க்ரிப்ஷன் என்றாலும்கூட சில மோசடிக்காரர்கள் நம் வாட்ஸ் அப் விபரங்களை உளவு பார்க்கும் வாய்ப்பு இருக்கிறது.

இதுபோன்ற பிரச்சினைகளிலிருந்து தற்காத்துக்கொள்ள என்னென்ன செய்யலாம் எனப் பார்ப்போம்.

ut

டிஸ் அப்பியரிங் மெசேஜ்

நீங்கள் அனுப்பும் குறுஞ்செய்திகளோ, புகைப்படங்களோ, காணொளிகளோ ஒருமுறை மட்டும் பார்க்கும்படியாக அனுப்பி வைக்க இயலும். இதனால் தேவையில்லாமல் உங்கள் புகைப்படங்கள் சேமிக்கப்படாது.

டிஸ் அப்பியரிங் ஒப்சனை மேம்படுத்தினால் நீங்கள் குறிப்பிடும் காலம் தாண்டி அந்த குறுஞ்செய்தி தானாக அழிந்துவிடும்.

அதிகாரப்பூர்வ வெர்சன்

வாட்ஸ் அப் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ மற்றும் லேட்டஸ்ட் வெர்ஷனைத்தான் பயன்படுத்துகிறீர்கள் என்று உறுதிசெய்து கொள்ளுங்கள்.

உத்தியோகப்பூர்வ ஆப்களை பயன்படுத்தாவிட்டால் அதில் மோசடி நடைபெறுவதற்கு வாய்ப்பு உண்டு.

i08

செட் லொக்

உங்கள் தனிப்பட்ட செட் விபரங்களை பிரத்யேகமாக லொக் செய்ய முடியும். தனி ஃபோல்டரில் சேமிக்கப்படும் இதை நீங்கள் மட்டும்தான் படிக்க முடியும்.

9[9

டூ ஸ்டெப் வெரிஃபிகேஷன்

உங்கள் வாட்ஸ் அப் அக்கவுண்டில் டூ ஸ்டெப் வெரிஃபிகேஷன் பாதுகாப்பு அம்சத்தை ஏற்படுத்திக் கொள்ளவும். இந்த அம்சத்தினால் உங்கள் வாட்ஸ் அப் சாட் விபரங்களை ஓபன் செய்யும்போது 6 இலக்கங்கள் கொண்ட பின் நம்பரை உள்ளீடு செய்ய வேண்டும். இதனால் ஸ்கேமர்களின் மோசடிகளிலிருந்து தப்ப முடியும்.

Recommended For You

About the Author: admin