யாழ், கண்டி, காலியிலும் கெசினோ

யாழ்ப்பாணம், கண்டி, காலியிலும் கெசினோ

தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் உரையாற்றுகையில்,

கெசினோ மூலம் பொருளாதாரத்தை வழிநடத்த அரசாங்கம் முற்படுகிறது. கெசினோவுக்கு அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்படவில்லை என அரசாங்கம் கூறியது.

ஆனால், தற்போது கொழும்பில் மாத்திரமல்ல கண்டி, காலி, யாழ்ப்பாணம் உட்பட பல பகுதிகளில் கெசினோவை அமைப்பதற்கான அனுமதிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

“கோட்டா கோ கம“ அமைக்கப்பட்டு காலிமுகத்திடலில் அரகலய போராட்டம் இடம்பெற்ற பகுதியில் கெசினோவொன்றை அமைக்க சீன நிறுவனமொன்றுக்கு அனுமதி வழங்க உள்ளீர்கள்.

இலங்கையில் இடம்பெற்ற வரலாற்று சிறப்புமிக்க போராட்டம் அது. நாட்டில் பாரிய புரட்சியை ஏற்படுத்தியிருந்தது. அந்த இடத்தில் கெசினோவை அமைக்க முற்படுகிறீர்கள்.

அரசாங்கம் நாட்டு மக்களின் உயிர்களுடன் விளையாடுகின்றது. போராடிய மக்களுக்கு இழுக்கை ஏற்படுத்த வேண்டாம்.“ என்றார்.

அரசாங்கத்தின் தோல்வி உறுதி

”இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிக்கு பொறுப்புக் கூற வேண்டியவர்கள், ராஜபக்சர்களும் நிதி அமைச்சின் அதிகாரிகளுமே என உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தது. ஆனால், அவர்களுக்கு எதிராக எவ்வித விசாரணைகளும் மேற்கொள்ளப்படவில்லை.” என நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்தார்.

”உயிர்த்த ஞாயிறுதின தாக்குதல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை அவசியமில்லை என்பதுடன், உள்நாட்டு விசாரணை போதுமானதென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கூறியிருந்தார். ஆனால், எவ்வித விசாரணைகளும் இதுவரை இடம்பெறவில்லை.

பொருளாதார நெருக்கடிக்கான தீர்வுகள் பற்றி இப்போது எவரும் பேசுவதில்லை. ஜனாதிபதித் தேர்தல் மற்றும் அதில் எவ்வாறு வெற்றிப்பெறுவது என்றே பேசுகின்றனர்.

இலங்கைக்குள் முதலீடுகளை கொண்டுவரும் திட்டங்களை முன்வைப்பதில் அரசாங்கம் தோல்விகண்டுள்ளது. சுற்றுலாப் பயணிகளின் வருகை பற்றி பேசுகின்றனர். ஆனால், சுற்றுலாப் பயணிகள் செலவு செய்யும் தொகை மிகவும் குறைவாக உள்ளது.

அதேபோன்று வடக்கு, கிழக்கு மக்கள் எதிர்பார்க்கும் எந்தவொரு திட்டங்களும் அரசாங்கத்தால் கொண்டுவரப்படுவதில்லை. அதற்கான சட்டங்களும் நிறைவேற்றப்படுவதில்லை.

உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு சட்டத்தை கொண்டுவர உள்ளதாக அரசாங்கம் கூறுகிறது. சர்வதேசத்தை ஏமாற்றவே இவ்வாறான சட்டங்கள் கொண்டுவரப்படுகின்றன. வடக்கு, கிழக்கு மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு இதில் தீர்வுகள் கிடைக்காது.

காணாமல் ஆக்கப்பட்டோரை கண்டுப்பிடித்து தருமாறு பல ஆண்டுகளாக மக்கள் போராடி வருகின்றனர். அதற்கு ஒரு தீர்வை அரசாங்கம் இதுவரை முன்வைக்கவில்லை.

தமிழ் மக்களை ஏமாற்ற பல்வேறு கருத்துகளை அரசாங்கம் கூறிவருகிறது. இந்த வருடத்துக்குள் அரசியல் தீர்வுக்காண ஆரம்பகட்ட நடவடிக்கைகளை அரசாங்கம் எடுக்காவிடின் அடுத்த தேர்தலில் தோல்வியடைவது நிச்சயம்.” என்றார்.

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் – உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு

உயர் நீதிமன்றத்தின் முன், சவாலுக்கு உட்படுத்தப்பட்ட பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு சபாநாயகருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் பிரதி சபாநாயகரால் குறித்த தீர்ப்பு இன்று (20) சமர்ப்பிக்கப்பட்டது.

சட்டமூலம் தொடர்பான நீதிமன்ற தீர்ப்பு பின்வருமாறு,

சட்டமூலத்தின் 3, 42, 53 மற்றும் 70 ஆகிய சரத்துகள் அரசியலமைப்பின் 12 (1) ஆவது பிரிவுடன் ஒத்துப்போகின்றன. மேலும் அவை நாடாளுமன்றத்தில் விசேட பெரும்பான்மையால் நிறைவேற்றப்பட வேண்டும்.

இருப்பினும், அந்த சரத்துகள் தொடர்பான உயர் நீதிமன்றத் தீர்ப்பில் முன்மொழிந்தபடி திருத்தினால், அந்த முரண்பாடுகள் நீங்கிவிடும்.

4ஆவது ஆவது சரத்து உயர்நீதிமன்ற தீர்ப்பின்படி, திருத்தம் செய்யப்பட வேண்டும்.

61 (1) சரத்து அரசியலமைப்பிற்கு உட்பட்டது மற்றும் விசேட பெரும்பான்மை மற்றும் வாக்கெடுப்பு மூலம் அங்கீகரிக்கப்பட வேண்டும். அந்த சரத்து மீதான உயர் நீதிமன்றத் தீர்ப்பில் முன்மொழியப்பட்ட திருத்தங்களைச் செய்தால், அந்த முரண்பாடு நீங்கிவிடும். அதற்கேற்ப, உயர் நீதிமன்ற தீர்ப்பின்படி 72 (2) வது சரத்தும் திருத்தப்பட வேண்டும்.

83 (7) சரத்து விசேட பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட வேண்டும். அந்தப் பிரிவின் மீதான உயர் நீதிமன்றத் தீர்ப்பில் முன்மொழியப்பட்ட திருத்தங்களைச் செய்தால் அந்த முரண்பாடுகள் நீங்கிவிடும்.

மேலும், சட்டமூலத்தின் விதிகளின்படி சமர்ப்பிக்கப்பட்ட திருத்தங்களுக்கு உட்பட்டு, எளிய பெரும்பான்மையால் மட்டுமே சட்டமூலத்தை சட்டமாக்க முடியும் என்று உயர் நீதிமன்றம் திர்மானித்துள்ளது.

இன்று நாடாளுமன்றத்தில் இடம்பெற்றுவரும் விவாதத்தில் முன்வைக்கப்படும் கருத்துகள் வருமாறு,

மின்கட்டண திருத்த அறிவிப்பு இரண்டு நாட்களில்

மின் கட்டண திருத்தம் தொடர்பான முன்மொழிவுகளை அடுத்த இரண்டு நாட்களுக்குள் இலங்கை மின்சார சபை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

நாம் எதிர்பார்த்ததைவிட மின்கட்டணத்தை குறைக்க முடியும் என்றும் அவர் கூறினார்.

உயர்நீதிமன்றத்தின் திருத்தங்களை அரசாங்கம் உள்வாங்கவில்லை

நிகழ்நிலை காப்புச் சட்டத் தொடர்பில் உயர்நீதிமன்றம் ஒன்பது சந்தர்ப்பங்களில் முன்வைத்த திருத்தங்களை அரசாங்கம் உள்வாங்கவில்லை. அதற்கு என்ன நடந்தது என்ன என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கேள்வியெழுப்பினார்.

சபாநாயகர் மீது இருந்த நம்பிக்கையை முற்று முழுதாக இழந்துள்ளோம் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இலங்கை இந்தியாவின் ஒரு பகுதியா? நாடாளுமன்றில் ஆளும் எதிர்க்கட்சிகள் மோதல்

அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ அண்மையில் இந்தியாவுக்கு மேற்கொண்ட அதிகாரப்பூர்வ பயணமொன்றில் மும்பாயில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டிருந்தார்.

இந்த நிகழ்வில் உரையாற்றும் போது, இலங்கை இந்தியாவின் ஒருபகுதி என்ற சர்ச்சைக்குரிய வார்த்தையொன்றை பயன்படுத்தியிருந்தார்.

இந்தக் கருத்துக்கு இலங்கையில் பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது.

இதுதொடர்பில் கருத்து வெளியிட்ட விமல் வீரவங்ச,

சுற்றுலா மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் இந்தியாவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில், இலங்கை இந்தியாவின் ஒரு பகுதியென கூறியிருந்தார். இது அரசாங்கத்தினா அல்லது அவரது தனிப்பட்ட நிலைப்பாடா என ஆளுங்கட்சியின் பிரதம கொறடா பிரசன்ன ரணதுங்கவிடம் கேள்வியெழுப்பினார்.

அது அவரது தனிப்பட்ட நிலைப்பாடாக இருந்தாலும் அமைச்சர் ஒருவருக்கு அவ்வாறான கருத்தை முன்வைக்க உள்ள உரிமை என்ன? எனவும் கேள்வியெழுப்பினார்.

இதற்கு பதிலளித்த ஆளுங்கட்சி கொறடா, ”அவ்வாறானதொரு விடயம் தொடர்பில் அமைச்சரவையில் பேசப்படவில்லை. உரிய அமைச்சர் அதற்கு பதில் அளிப்பார்.” என்றார்.

இதன்போது குறுக்கிட்ட அமைச்சர் மனுஷ நாணயக்கார, ”அமைச்சரின் முழுமையான உரையை பார்த்தால் அவர் கூறிய விடயங்கள் பற்றி அறிந்துக்கொள்ள முடியும்.

சமூக ஊடகங்களில் குறித்த உரையை துண்டு துண்டாக்கி வெளியிட்டு மக்களை குழப்பத்திற்கு உள்ளாக்கியுள்ளனர்.

இலங்கைக்கும், இந்தியாவுக்குமான உறவுகளை வெளிப்படுத்தி, எமது ஒற்றுமைகள் பற்றி வெளிப்படுத்தி, எமது வரலாற்று தொடர்புகளையும், உறவுகளையும் வெளிப்படுத்தி இந்திய சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்கு வருமாறு அழைப்பு விடுத்திருந்தார்.

இதில் அவர் கூறிய கருத்தை திரிபுபடுத்தி சமூக ஊடகங்களில் வெளியிட்டு வருகின்றனர்.” என்றார்.

இந்தியாவில் பட்டப்படிப்பை முடித்துவிட்டு அரசாங்க வேலை கிடைப்பதில் சிரமங்களை எதிர்நோக்கும் இந்தியாவில் இருந்து நாடு திரும்பிய இலங்கை மாணவர்களை சந்தித்தேன்.

Offer அமைப்பின் உதவியுடன் மாணவர்களின் ஆவணங்களை ஒழுங்குபடுத்தவும், திருப்பி அனுப்பப்பட்ட குடும்பங்களின் வாழ்வாதாரத்திற்கு உதவும் வகையில் தலா 50000ரூபா ஒதுக்கீடும் செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டது.

Recommended For You

About the Author: admin