இந்த ஊரில் பெண்கள் 5 நாட்கள் ஆடையே அணியமாட்டாங்க

இந்தியாவின் சில கிராமப்புறப் பகுதிகளில் இன்னும் பழமையான மரபுகளை கடைபிடித்து வருகின்றனர். அவை முற்றிலும் விசித்திரமான சொல்லப்போனால் விநோதமானவையாக இருக்கின்றன. இன்னும் இப்படியான சடங்குகளை செய்கிறார்களா என்று கேட்கும் அளவிற்கு இருக்கின்றன.

முன்னொரு காலத்தில் ஹிமாச்சலப்பிரதேச மணிகர்ணா பள்ளத்தாக்கிலுள்ள பினி கிராமத்தில், பேய்கள் மற்றும் அரக்கர்கள் அலைந்து திரிந்ததாக சொல்லப்படுகிறது.

அந்த பேய்கள் அழகான ஆடைகள் உடுத்தியிருக்கும் திருமணமான பெண்களை அழைத்து சென்றுவிடுமாம். இப்படி நடந்து கொண்டிருக்க இந்த கிராமத்து பெண்களை லாஹு கோண்ட் என்ற தெய்வம் காப்பாற்றியுள்ளது.

லாஹு கோண்ட் தெய்வம் பேய்களை அழித்த நிகழ்வை நினைவு கூறும் விதமாக சாவான் மாதத்தில் 5 நாட்கள் இந்த கிராமத்தில் உள்ள பெண்கள் ஆடைகள் அணிவதில்லை.

இந்த பாரம்பரியம் பல நூற்றாண்டுகளாக தொடர்ந்து கடைபிடிக்கப்பட்டு வருகிறது. காலப்போக்கில் வாலிப பெண்கள் ஒற்றை ஆடை உடுத்திக்கொள்ள மட்டும் அனுமதி அளித்துள்ளனர். இந்த சமயத்தில் கம்பளியால் செய்யப்பட்ட பட்காவைப் பயன்படுத்துகின்றனர்.

ஆனால் வயது முதிர்ந்தவர்கள் நிர்வாணமாகவே இருக்கின்றனர். இந்த விதியை மீறி ஆடை அணியும் பெண்கள் சிறிது நாட்களிலேயே துர்சம்பவங்களை சந்திப்பதால் யாரும் இந்த பாரம்பரியத்தை மீர முயல்வதில்லை.

இன்றைய காலத்தில் கிராமத்தில் உள்ள பெண்கள் நிர்வாணமாக வெளியே வருவதற்கு பதிலாக வீட்டிற்குள்ளேயே பூட்டி இருக்கிறார்கள்.

பெண்களுக்கு மட்டும் இல்லாமல் ஆண்களுக்கும் சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். வருடத்தின் இந்த 5 நாட்களில் ஆண்கள் யாரும் மது மற்றும் மாமிசம் உண்ணக்கூடாது.

சம்பிரதாயத்தை முறையாக கடைபிடிக்காவிட்டால், தெய்வங்கள் கோபமடைந்து அவருக்கு தீங்கு விளைவிக்கும் என்பது ஐதீகம்.

அதேபோல இந்த 5 நாட்களும் கணவன் மனைவி தள்ளி இருக்க வேண்டும் என்றும் சிரித்து பேசக்கூடாது என்றும் கூறுகின்றனர்.

சிரித்து, மகிழ்ந்து இருப்பதைப் பார்த்தால் மீண்டும் பேய் வந்து பெண்ணை தூக்கிசென்றுவிடும் என்பது இந்த கிராமத்து மக்களின் நம்பிக்கை.யாராலும் பங்கேற்க முடியாது.

Recommended For You

About the Author: admin