ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெஸி நவல்னி மரணம்

ரஷ்யாவின் மிகமுக்கிய எதிர்க்கட்சித் தலைவர் அலெஸி நவல்னி சிறைச்சாலையில் உயிரிந்துள்ளதாக சிறைச்சாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதி விளடிமீர் புட்டினுக்கு சிம்சொப்பனமாக விளங்கிய அலெஸி நவல்னி மீது, ஊழலுக்கு எதிரான தனது அறக்கட்டளை மூலமாக பணத்தை முறைகேடாகக் கையாண்டதாகத் தெரிவித்து கடந்த 2013ஆம் ஆண்டு வழக்குத் தொடரப்பட்டது.

இந்த வழக்கில் மொஸ்கோ நீதிமன்றம் கடந்த 2021ஆம் ஆண்டு அவருக்கு மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது.

இதேவேளை ஏற்கனவே இவருக்கு நீதிமன்றம் மோசடி மற்றும் நீதிமன்ற அவமதிப்பு போன்ற குற்றங்களுக்காக 19 வருட சிறைத்தண்டனை வழங்கியிருந்ததது.

இந்தநிலையில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அலெஸி நவல்னிக்கு இன்று வெள்ளிக்கிழமை திடீரென உடல்க் குறைபாடு ஏற்பட்டு சுயநினைவை இழந்ததாகவும் உடனடியாக அவருக்கு மருத்து சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும் அவர் உயிரிழந்ததாக சிறைச்சாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Recommended For You

About the Author: admin