நேற்றிரவு யாழ்ப்பாணம் முற்றவெளி , திறந்த வெளி அரங்கில் தென்னிந்திய பின்னணிப் பாடகர் ஹரிஹரனின் இசை நிகழ்ச்சி மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த நிகழ்வானது தென்னிந்திய நடிகை ரம்பாவின் கணவரான இந்திரன் நோர்த்ரன் யுனியினால் ஏற்பாடு செய்யப்பட்டது.
ஆரம்பத்தில் இலவசம் என அறிவிக்கப்பட்ட இந்த நிகழ்வானது, பின்னர் 25,000, 7,000, 3,000 ரூபா மற்றும் பின்னால் நின்று பார்ப்பவர்களுக்கு இலவசம் என அறிவிக்கப்பட்டது. அத்துடன் இந்த இசை நிகழ்வில் கலந்துகொள்ளும் நட்சத்திரங்களுடன் விருந்து அருந்தி புகைப்படம் எடுப்பதற்கு 30,000 ரூபா என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் நேற்று இசைநிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டு இருந்தவேளை ரசிகர்கள் தடைகளை உடைத்துக்கொண்டு பாய்ந்து சென்று திறந்த வெளி அரங்கை தமது கட்டுப்பாட்டினுள் கொண்டுவந்தனர்.
இதன்போது பொலிஸார் மற்றும் கறுப்பு உடை தரித்த பாதுகாப்பு பிரிவினரால் ரசிகர்கள் மீது தாக்குதல் நடாத்தப்பட்டது. பின்னர் இசை நிகழ்ச்சி இடைநிறுத்தப்பட்டது.
சரியான திட்டமிடல் இன்மையே இந்த குழப்பத்திற்கு காரணம் என தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் பணம் கொடுத்து டிக்கெட் வாங்கிய பலர் இருக்கைகள் இல்லாமையினால் இருந்ததாகவும் ஆனால் பலர் ஐந்து, ஆறு கதிரைகளை அடுக்கி வைத்து இருந்ததாகவும், எழுந்து கதிரைக்கு மேலே நின்றதாகவும் கூறப்படுகிறது.
மேற்பார்வையாளர்களிடம் இது குறித்து முறைப்பாடு செய்து போதும் அவர்கள் இருக்கைகளை வாங்கி கொடுக்காமல் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தாகவும் கூறப்படுகிறது.
நோர்த்ரன் யுனியில் கல்வி கற்கும் மாணவர்களும் அங்கு கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தாகவும்
அவர்களிடம் கூறிய போது தாங்கள் சம்பளத்துக்கு வேலை செய்யவில்லை என்றும், தாங்கள் கல்வி கற்கும் காரணத்தால் அங்கு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்ததுடன்,
இது குறித்து மேற்பார்வையாளர்களிடம் முறையிடுமாறும் கூறிதாகவும் கூறப்படுகிறது.