உக்ரைனுக்கு கைகொடுக்கும் பிரிட்டன்

உக்ரேனுடன் அனைத்து பொருள்களுக்கும் சுங்கவரி இல்லாத வர்த்தகத்தை 2029 வரை நீட்டிப்பதாக பிரிட்டன் அறிவித்துள்ளது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் ரஷ்யாவுடனான போர் தொடங்கிய பின்னர் உக்ரேனுடனான அனைத்து வணிகங்களுக்கும் பிரிட்டன் வரிகளை நீக்கியது. இந்த ஏற்பாடு 2024 மார்ச் வரை நீடிக்கும் என்று முன்னதாக உடன்பாடானது.

முட்டை, கோழி தவிர்த்த அனைத்து பொருள்களுக்கும் சுங்கவரி இல்லாத வணிகம் ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படும் என்று பிரிட்டனின் வாணிபம், வர்த்தக அமைச்சு கூறியது. முட்டை, கோழி வணிகம் ஈராண்டுகளுக்கு நீட்டிக்கப்படும்.

உக்ரேனுக்கான ஏற்றுமதிக்கான வரிகளை நீக்குவதன் மூலம் பிரிட்டிஷ் நிறுவனங்களும் பயனடையும்.

இதேவேளை, உக்ரேனுக்கு ஆயுதங்களும் வழங்கி வருவதுடன், புதிய மின்னிலக்க வர்த்தக உடன்பாடு உட்பட சாதகமான வர்த்தக விதிமுறைகள் மூலம் உக்ரேனை பிரிட்டன் ஆதரித்தும் வருகிறது.

Recommended For You

About the Author: admin