அவுஸ்திரேலியாவின் மிகப்பெரிய வங்கிகளில் ஒன்றான கொமன்வெல்த் வங்கி, ஆயிரக்கணக்கான ஏடிஎம்கள் மற்றும் கிளைகளை மூடு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
வங்கி அதிக லாபம் ஈட்டினாலும், ஆயிரக்கணக்கான ஏடிஎம்கள் மற்றும் கிளைகளை மூடுவது ஏன்? என்ற கேள்வி எழுந்துள்ளதாக பொருளாதார நிபுணர்கள் கூறியுள்ளனர்.
கொமன்வெல்த் வங்கி கடந்த ஐந்து ஆண்டுகளில் 354 கிளைகளை மூடியுள்ளது. மூன்று முக்கிய நகரங்களில் அதிக மக்கள் தொகை கொண்ட பகுதிகளில் அடுத்த மாதம் மேலும் மூன்று கிளைகளை மூட திட்டமிட்டுள்ளது.
அவுஸ்திரேலியாவின் மிகப்பெரிய வீட்டு வசதிக்கான கடன்களை வழங்கும் கொமன்வெல்த் வங்கி, கடந்த 2018 ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரை அந்த நாட்டில் ஆயிரத்து 82 கிளைகளை கொண்டிருந்தது.
எனினும், பணப்புழக்கம் கடுமையாக வீழ்ச்சியடைந்த நிலையில், வங்கி ஒரே சந்தர்ப்பத்தில் 2 ஆயிரத்து 297 ஏடிஎம்களை மூடியது. இதனால் அந்த வங்கியின் ஏடிஎம்களின் எண்ணிக்கை 54 சதவீதமாக குறைந்துள்ளது.
கொமன்வெல்த் வங்கி தற்போது மத்திய அடிலெய்டில் உள்ள அதன் ரண்டில் வர்த்தக மையத்தில் கிளையையும், கோல்ட் கோஸ்டில் உள்ள கூலங்கட்டாவில் உள்ள விற்பனை நிலையங்களையும், சிட்னியில் உள்ள கிளையையும் எதிர்வரும் மார்ச் முதலாம் திகதி மூட திட்டமிட்டுள்ளது.
அண்மையில் மேற்கொண்ட மதிப்பாய்வின் பின்னர் ரண்டில் வர்த்தக மையம்,அடிலெய்ட், கூலங்கட்டா மற்றும் கிளைகளை நிரந்தரமாக மூட முடிவு செய்துள்ளதாக வங்கியின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கொமன்வெல்த் வங்கியின் துணை நிறுவனமான Bankwest, எதிர்வரும் வாரங்களில் பேர்த் மற்றும் மேற்கு அவுஸ்திரேலியாவில் உள்ள பிராந்திய கிளைகளையும் மூட உள்ளது.
அவுஸ்திரேலியால் இயங்கி வரும் சர்வதேச வங்கியான கொமன்வெல்த் வங்கி, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, ஆசியா, அமெரிக்கா மற்றும் பிரித்தானியா நாடுகளில் இயங்கி வருகிறது.
சில்லறை வர்த்தகம், வர்த்தகம், நிறுவன வங்கி, நிதி முகாமைத்துவம், ஓய்வூதியம், காப்பீடு, முதலீடு மற்றும் தரகு சேவைகள் உட்பட பல்வேறு நிதிச் சேவைகளை வழங்கி வருகிறது.
இந்த வங்கி கட்த 1911 ஆம் ஆண்டு அவுஸ்திரேலிய அரசாங்கத்தால் நிறுவப்பட்டதுடன் கடந்த 1996 ஆம் ஆண்டில் முழுமையாக தனியார்மயமாக்கப்பட்டது.
கொமன்வெல்த் வங்கி தற்போது அவுஸ்திரேலிய பெண்கள் கிரிக்கெட் அணியின் ஆடை (ஜெர்சி) அனுசரணையாளராக இருந்து வருகிறது.