சமையலுக்கு தினமும் பயன்படுத்தப்படும் பூண்டு விலை இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. சென்னை, கோயம்பேடு சந்தையில் உள்ள கடைகளில் ஒரு கிலோ பூண்டு ரூ.420 வரை விற்கப்படுகிறது, வெளி சந்தையில் உள்ள கடைகளில் ஒரு கிலோ பூண்டு ரூ.500 இற்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. உதிரி பூண்டு ஒரு கிலோ ரூ.350 இற்கு விற்கப்படுகிறது.
மருத்துவ குணம் கொண்ட பூண்டு இல்லாமல் ரசம் உள்பட எந்தவொரு சமையலும் செய்ய முடியாது. உற்பத்தியாளர்களிடம் இருந்து பூண்டுவை அதிகளவில் கொள்முதல் செய்து பின்னர் தட்டுப்பாடு ஏற்படும் நேரத்தில் அதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி பூண்டுவின் விலையை நிர்ணயம் செய்து வருகின்றனர். இதன் காரணமாகவே பூண்டு விலை தொடர்ந்து அதிகரித்து வருவதாக மொத்த வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
கடந்த ஆண்டு தொடக்கத்தில் ஒரு கிலோ பூண்டு ரூ.50 இற்கு மட்டுமே விற்கப்பட்ட நிலையில் தற்போது அதன் விலை 10 மடங்கு வரை அதிகரித்து உள்ளது. அத்தியாவசியப் பொருட்களான பூண்டு பதுக்கலில் ஈடுபடுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மொத்த வியாபாரிகள் இந்திய மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்து உள்ளனர்.
இந்தியாவின் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், குஜராத் ஆகிய மாநிலங்களில் பூண்டு உற்பத்தி அதிகளவில் நடக்கிறது. மொத்த விற்பனை கடைகளில் ஒரு கிலோ பூண்டு ரகத்தை பொறுத்து ஒரு கிலோ ரூ.350 முதல் ரூ.400 வரை விற்கப்படுகிறது.
கடந்த ஆண்டு தொடக்கத்தில் ஒரு கிலோ பூண்டு ரூ.50 இற்கு மட்டுமே விற்கப்பட்ட நிலையில் தற்போது அதன் விலை 10 மடங்கு வரை அதிகரித்து உள்ளது. அத்தியாவசியப் பொருட்களான பூண்டு பதுக்கலில் ஈடுபடுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மொத்த வியாபாரிகள் மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்து உள்ளனர்.
மத்திய பிரதேசம், ராஜஸ்தான், குஜராத் ஆகிய மாநிலங்களில் பூண்டு உற்பத்தி அதிகளவில் நடக்கிறது. மொத்த விற்பனை கடைகளில் ஒரு கிலோ பூண்ட்டின் அளவை பொறுத்து பொறுத்து ஒரு கிலோ ரூ.350 முதல் ரூ.400 வரை விற்கப்படுகிறது.