பிலிப்பைன்ஸின் மின்டனா மாநிலத்தை தனி நாடாக பிரிக்க போவதாக அந்நாட்டின் முன்னாள் ஜனாதிபதி Rodrigo Duterte எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஜனாதிபதி Ferdinand Marcos Jr பிலிப்பைன்ஸ் அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொண்டால், மின்டானாவ் மாநிலம் தனிநாடாக அறிவிக்கப்பட வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி Rodrigo கூறியுள்ளார்.
இந்த நிலையில், பிலிப்பைன்ஸ் நாட்டை பிரிக்கும் எண்ணத்தை கொண்டிருப்பவர்களுக்கு எதிராக அதிகார, படை பலம் பயன்படுத்தப்படும் என அந்நாட்டின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் Eduardo Ano எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தனது சொந்த மாநிலமான மின்டனாவைப் பிலிப்பைன்ஸ் நாட்டில் இருந்து பிரிக்கப்போவதாக அந்நாட்டின் முன்னாள் ஜனாதிபதி Rodrigo Duterte கூறியிருந்தமை தொடர்பில் கருத்து வெளியிடும் போதே இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
பிலிப்பைனஸின் பொருளாதார அபிவிருத்தியை மேம்படுத்தும் நோக்கில் கடந்த 1987 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட அரசியலமைப்புத்திருத்தச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள ஜனாதிபதி Ferdinand Marcos Jr ஆதரவு தெரிவித்துள்ளார்.
எனினும் Ferdinand Marcos Jr தனது அதிகாரத்தை பலப்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாக Rodrigo Duterte குற்றம் சுமத்தியுள்ளார்.