“வேலையை விட கணவரே முக்கியம்”: பிபிசியிலிருந்து விடைபெறுகிறார் கரோல் கிர்க்வுட்!

“வேலையை விட கணவரே முக்கியம்”: பிபிசியிலிருந்து விடைபெறுகிறார் கரோல் கிர்க்வுட்!

பிபிசி (BBC) தொலைக்காட்சியின் பிரபல வானிலை அறிவிப்பாளர் கரோல் கிர்க்வுட் (Carol Kirkwood), தனது கணவர் மீதான அன்பின் காரணமாக 25 ஆண்டுகால ஊடகப் பணியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

63 வயதான கரோல், 2010 முதல் BBC Breakfast நிகழ்ச்சியின் முதன்மை வானிலை அறிவிப்பாளராக இருந்து வருகிறார். நேரலையில் இந்த அறிவிப்பை வெளியிடும்போது அவர் உணர்ச்சிவசப்பட்டார். எதிர்வரும் ஏப்ரல் மாதத்துடன் அவர் பிபிசியிலிருந்து விலகுகிறார்.

கடந்த 2023 டிசம்பரில் அவர் திருமணம் செய்துகொண்ட 50 வயதான காவல்துறைஅதிகாரி ஸ்டீவ் ராண்டால் (Steve Randall) உடன் அதிக நேரத்தைச் செலவிட விரும்புவதாகத் தெரிவித்துள்ளார்.

“நான் உணர்ச்சிவசப்பட விரும்பவில்லை. பிபிசியில் பணியாற்றுவதை நான் நேசிக்கிறேன், ஆனால் என் வேலையை விட என் கணவரை நான் அதிகம் நேசிக்கிறேன்,” என தனது சக அறிவிப்பாளர்களிடம் அவர் கூறியுள்ளாா்.

1998 இல் பிபிசியில் இணைந்த கரோல், பிரித்தானியத் தொலைக்காட்சி உலகில் மிகவும் நேசிக்கப்படும் ஒரு முகமாகத் திகழ்ந்தார்.

1998 இல் பிபிசி வானிலை மையத்தில் (BBC Weather Centre) இணைந்த கரோல், 2010 முதல் ‘பிபிசி பிரேக்பாஸ்ட்’ (BBC Breakfast) நிகழ்ச்சியின் முதன்மை வானிலை அறிவிப்பாளராகத் திகழ்ந்தார்.

வானிலை அறிவிப்புத் துறையில் சிறந்த சேவைக்காகப் பலமுறை “சிறந்த வானிலை அறிவிப்பாளர்” (Best TV Weather Presenter) விருதுகளைப் பெற்றுள்ளார்.

நேரலை நிகழ்ச்சிகளின் போது நாய் ஒன்று அவரை இழுத்துச் சென்றது மற்றும் கிரீன்விச் பூங்காவில் நாய் நடைப்பயிற்சி செய்பவர்களைத் தவறாகக் குறிப்பிட்ட நகைச்சுவையான தருணங்கள் இன்றும் மக்களால் ரசிக்கப்படுகின்றன.

‘ரெட் அரோஸ்’ (Red Arrows) விமானத்தில் பறந்தது மற்றும் ‘ரெட் டெவில்ஸ்’ (Red Devils) குழுவுடன் ஸ்கைடிவிங் (Skydiving) செய்தது போன்ற துணிச்சலான செயல்களையும் அவர் செய்துள்ளார்.

2015 இல் ‘ஸ்டிரிக்ட்லி கம் டான்சிங்’ (Strictly Come Dancing) போட்டியில் பங்கேற்று 8-வது வாரம் வரை முன்னேறினார்.

ஊடகப் பணி தவிர, அவர் 5 காதல் புதினங்களை (Novels) எழுதியுள்ளார். தற்போது பணியிலிருந்து ஓய்வு பெற்று மேலும் பல புத்தகங்களை எழுதத் திட்டமிட்டுள்ளார்.

பிபிசி இன்னும் கரோலுக்குப் பதிலாக நிரந்தரமாக யார் நியமிக்கப்படுவார் என்பதை உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை.

எனினும், பிபிசி வானிலை குழுவில் இருக்கும் மேட் டெய்லர் (Matt Taylor) அல்லது பிபிசி ஸ்கொட்லாந்தின் மூத்த வானிலை அறிவிப்பாளர் ஜூடித் ரால்ஸ்டன் (Judith Ralston) ஆகியோரில் ஒருவர் இந்தப் பதவிக்கு வர வாய்ப்புள்ளதாக ஊடக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஏப்ரல் மாதம் அவர் விடைபெற்ற பின்னர், அவர் தனது கணவருடன் பிரான்ஸ் போன்ற நாடுகளுக்குப் பயணம் செய்யத் திட்டமிட்டுள்ளார்.

Recommended For You

About the Author: admin