ரஷ்யாவை சேர்ந்த விண்வெளி வீரரான Oleg Kononenko விண்வெளியில் நீண்ட நாட்கள் தங்கியவர் என்ற சாதனை படைத்துள்ளார்.59 வயதான Oleg Kononenko சுமார் இரண்டரை ஆண்டுகளை விண்வெளியில் தங்கியிருந்தார்.
ஏற்கனவே மற்றுமொரு ரஷ்ய விண்வெளி வீரரான Gennady Padalka 878 நாட்களும் 11 மணி 29 நிமிடம் 48 நொடிகள் விண்வெளியில் தங்கியிருந்து கடந்த 2017 ஆம் ஆண்டு சாதனை படைத்திருந்தார்.
இந்த நிலையில், 5வது முறையாக கடந்த 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் 23ஆம் திகதி விண்வெளிக்கு சென்ற Oleg Kononenko, ஆயிரத்து 110 நாட்கள் விண்வெளியில் உள்ள சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கியிருந்தார்.
Oleg Kononenko தனது 34வது வயதில் விண்வெளி பயணத்திற்கான பயிற்சிகளை ஆரம்பித்தார்.
அவர் கடந்த 2008 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 8 ஆம் திகதி முதன் முறையாக விண்வெளிக்கான பயணத்தை மேற்கொண்டார்.