மாலைத்தீவிலிருந்து வெளியேறும் இந்திய படைகள்

மாலைத்தீவில் இருக்கும் இந்திய படைகள் மே மாதம் 10 ஆம் திகதிற்குள் வெளியேறுவதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

மாலைத்தீவு ஜனாதிபதி முகமது முய்சு இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டையே மேற்கொண்டு வருகின்றார். இந்நிலையில் மாலத்தீவில் உள்ள இந்திய இராணுவப்படைகளை மார்ச் மாதம் 15 ஆம் திகதிக்குள் வெளியேற வேண்டும் என தெரிவித்தார்.

இதுதொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே சில நாட்களுக்கு முன்பு பேச்சுவார்த்தை இடம்பெற்றிருந்தது. நேற்று முன்தினம் இடம்பெற்ற இரண்டாவது கட்ட உயர்மட்ட பேச்சுவார்த்தை இடம்பெற்றது.

இந்த பேச்சுவார்த்தையில் இரு நாடுகளும் பரஸ்பரமாக செயல்பட்டு தீர்வு காண்பதாக ஒப்புக் கொண்டதாக இந்திய ஊடகங்டகள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பில் மாலைத்தீவு வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவிக்கையில்,

“கூட்டாண்மையை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அடையாளம் காணுதல், நடப்பு வளர்ச்சி ஒத்துழைப்பு திட்டங்களை விரைவுபடுத்துதல் உள்பட இருதரப்பு ஒத்துழைப்பு தொடர்பான பரந்த அளவிலான பிரச்சனைகள் குறித்து இருதரப்பும் விவாதங்கள் தொடர்ந்தன.

மாலைத்தீவில் உள்ள மூன்று விமான தளங்களில் ஒன்றில் இராணுவ வீரர்களை மார்ச் 10 ஆம் திகதிக்குள் இந்திய அரசு திரும்பப்பெறும். மற்ற இரண்டு தளங்களில் உள்ள இராணுவ வீரர்களை மே 10 ஆம் திகதிக்குள் திரும்பப்பெறும். இதை இரு தரப்பும் ஒப்புக்கொண்டன.” என்று தெரிவித்தது.

Recommended For You

About the Author: admin