இன்றைய ராசிபலன்கள் 04.02.2024

மேஷம்:
வணிக நடவடிக்கைகளில் வெற்றி பெற இன்று கடின உழைப்பு தேவை. உடன் வேலை பார்க்கும் சக ஊழியர்களின் ஒத்துழைப்பால் உங்களது வேலைப்பளு குறையும். பணியிடத்தில் நீங்கள் விரும்பிய பொறுப்பு கிடைப்பதன் மூலம் மன அழுத்தத்திலிருந்து விடுபடுவீர்கள்
பரிகாரம்: விநாயகப் பெருமானை வழிபடவும்

ரிஷபம்:
வியாபாரத்தில் இருக்கும் பிரச்சனைகளை தீர்க்க தேவையான ஒத்துழைப்பு கிடைக்கும். இதனால் பொருளாதார நிலை சீராகும். புதிய முதலீடு செய்வதற்கு இன்று நேரம் சாதகமாக இல்லை. ஊழியர்களுக்கு இன்றைய நாள் மிகவும் சவாலான நாளாக இருக்கும்.
பரிகாரம்: அனுமன் கோவிலுக்கு சென்று வழிபடவும்

மிதுனம்:
வியாபாரிகள் இன்று தங்களின் வணிக நடவடிக்கைகளில் அதிக கவனம் செலுத்த வேண்டிய அவசியம் உள்ளது. புதிய செயல்களில் ஈடுபடும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உயரதிகாரிகளுடன் சுமுக உறவை பேணுவது அவசியம்.இன்று சில முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டியிருக்கலாம்.
பரிகாரம்: சூரிய பகவானை வழிபடவும்

கடகம்:
வணிகத்தில் இருப்பவர்கள் ஊழியர்களின் செயல்பாடுகளை புறக்கணிக்க கூடாது. அரசாங்க வேலையில் இருப்பவர்கள் கவனமாக இருக்கவும். இன்று செலவுகளைக் கட்டுப்படுத்த வேண்டும். தைரியமாக மற்றும் தன்னம்பிக்கையுடன் இருப்பது பிரச்சனைகளை சமாளிக்க உதவும்.
பரிகாரம்: விநாயகப் பெருமானுக்கு அருகம்புல் வைத்து வழிபடுங்கள்

சிம்மம்;
இன்று உங்களது தற்போதைய வேளைகளில் மட்டுமே கவனம் செலுத்துங்கள். உங்கள் கோப்புகள் மற்றும் ஆவணங்களை இன்று பாதுகாப்பாக வைத்திருங்கள். பொறுமையுடன் இருந்தால் உங்களது வளர்ச்சி பாதையில் முன்னேறி செல்வீர்கள். கடின உழைப்பிற்கு ஏற்ற பலன்கள் கிடைக்கும்.
பரிகாரம்: பசு மாடுகளுக்கு தீவனம் வைக்கவும்

கன்னி:
சொத்து வாங்குதல் மற்றும் விற்பது தொடர்பான விஷயங்களில்ஆவணங்களை முழுமையாக ஆய்வு செய்யுங்கள். விற்பனை தொடர்பான வணிகத்தில் நல்ல வாய்ப்புகள் இருக்கும். உங்களது பேச்சில் வெளிப்படை தன்மையை கடைபிடியுங்கள்.நிலுவையில் இருக்கும் வேலைகளை முடிக்க வேகம் காட்டுவீர்கள்.
பரிகாரம்: புதன் கிரகம் தொடர்பான விஷயங்களை தானம் செய்யுங்கள்

துலாம்:
வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் இன்று அவர்களது அனைத்து வேலைகளையும் சுமுகமாக முடிப்பார்கள். முக்கிய விஷயங்கள் அனைத்து முடிவுகளையும் நீங்களே எடுங்கள். நிதி பிரச்சனைகள் இன்று முழுவதும் இருந்து கொண்டே இருக்கும். சுறுசுறுப்புடன் செயல்படுவது வெற்றியை தரும்.
பரிகாரம்: மாற்று திறனாளி நபர்களுக்கு உதவுங்கள்

விருச்சிகம்:
வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் ரிஸ்க் எடுக்க வேண்டாம். புதிய நபர்களை நம்ப வேண்டாம். இல்லை என்றால் ஏமாற்றத்தை சந்திக்க நேரிடும். அலுவலகம் தொடர்பான பணிகளில் உயர் அதிகாரிகளுடன் பழகும் போது உங்கள் இயல்பை வெளிப்படுத்துங்கள். வியாபாரத்தை பெருக்குவதற்கான புதிய முயற்சிகள் சாதகமாக அமையும்.
பரிகாரம்: தெரு நாய்களுக்கு உணவளிக்கவும்

தனுசு:
மின்சாதன பொருட்கள் தொடர்பான வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் இன்று நஷ்டத்தை சந்திக்க நேரிடலாம். கூட்டுத் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களும் கவனமாக இருக்க வேண்டும், சிறு சிறு தவறான புரிதல்கள் உறவில் விரிசலை உண்டாக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை கூடும்.
பரிகாரம்: அன்னை சரஸ்வதியை வழிபடவும்

மகரம்:
வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் இன்று அதிகம் உழைக்க வேண்டியது இருக்கும். ஏதேனும் சிக்கல் ஏற்பட்டால், உங்கள் கொள்கைகளில் சில சமரசம் செய்ய வேண்டியிருக்கும். பணியில் இருக்கும் ஊழியர்கள் இன்று கூடுதல் பணிச்சுமையை சந்திக்க நேரிடலாம்.
பரிகாரம்: சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்யவும்

கும்பம்:
இன்று நீங்கள் எடுக்கும் எந்தவொரு வணிக முடிவையும் கவனமாக எடுக்க வேண்டும். வீட்டில் உள்ள மூத்த குடும்ப உறுப்பினர்களின் அறிவுரைகளையும் வழிகாட்டுதலையும் பின்பற்றுங்கள். இன்று பங்குகள் போன்ற நடவடிக்கைகளில் பணத்தை முதலீடு செய்வது நல்லதல்ல. உத்தியோகத்தில் சூழ்நிலை உங்களுக்கு சாதகமாக இருக்கும்.
பரிகாரம்:பைரவர் கோவிலுக்கு சென்று வழிபடுங்கள்

மீனம்:
வியாபாரம் தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபட்டிருப்பவர்கள் மிகவும் புத்திசாலித்தனமாகவும் கவனமாகவும் இன்று முடிவுகளை எடுக்க வேண்டும். அரசுப் பணிகளில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு இடையூறு ஏற்படலாம். ஏற்கனவே திட்டமிட்டிருந்த முக்கியமான பயணங்கள் ரத்து செய்யப்பட கூடும் என்பதால் ஏமாற்றம் ஏற்படும்.
பரிகாரம்:ஸ்ரீ ஸூக்தம் பாராயணம் செய்யவும்

Recommended For You

About the Author: admin