பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் சனிக்கிழமை காலை கத்திக் குத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
பாரிஸின் Gare de Lyon ரயில் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட இந்த தாக்குதலில் மூவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
அந் நாட்டு நேரப்படி சனிக்கிழமை காலை 7.35 மணியளவில் (0635 GMT) கத்தி குத்து நடத்தப்பட்டுள்ளது.
சம்பவத்துடன் தொடர்புடைய நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் மாலி நாட்டைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
தாக்குதலுக்கும் தீவிரவாத செயல்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்பதை பொலிஸார் உறுதிப்படுத்தினர்.
மேலும், தாக்குதலை நடத்திய சந்தேக நபர் உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டவர் என ஆரம்ப கட்ட விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.
தாக்குதல் நடத்தியவரின் நோக்கம் தெளிவாக தெரியவில்லை.
2024 ஒலிம்பிக் போட்டிகளை பாரிஸ் நடத்துவதற்கு ஆறு மாதங்களுக்கும் குறைவாகவே காலம் உள்ள நிலையில் இந்த தாக்குதல் நடந்துள்ளது.
2024 ஒலிம்பிக் போட்டிகளுக்காக பாரிஸுக்கு 15 மில்லியன் பார்வையாளர்கள் வருவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் 100 மில்லியனுக்கும் அதிகமான பயணிகள் பிரான்சின் மிகப்பெரிய பிரதான ரயில் நிலையமான Gare de Lyon வழியாக பயணிப்பதாகவும் கூறப்படுகிறது