கெஹலியவுக்கு வெளிநாட்டு பயணத் தடை

சர்ச்சைக்குரிய தரமற்ற மருந்துகளை இறக்குமதி செய்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் வழங்க முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவை நாளை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் தற்போதைய சுகாதார அமைச்சருக்கு வெளிநாடு செல்வதற்கும் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு, மாளிகாந்த நீதிவான் நீதிமன்றம் இந்த உத்தரவினை இன்று பிறப்பித்துள்ளது.

ரம்புக்வெல்ல நேற்றைய தினம் குற்றப் புலனாய்வுப் பிரிவின் முன்னிலையில் ஆஜராகவிருந்தார்.

எனினும், மற்றுமொரு வழக்கு தொடர்பாக கொழும்பு மேல் நீதிமன்றில் ஆஜராக வேண்டியிருந்தமையால் அவர் ஆஜராகத் தவறியிருந்தார்.

இதனால் அமைச்சர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் வேறு திகதி கோரியுள்ளதாக கோரியிருந்தார்.

இந்நிலையிலேயே கொழும்பு, மாளிகாந்த நீதிவான் நீதிமன்றம் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

10 சிவில் சமூக ஆர்வலர்களுக்கு பிணை

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு முன்பாக சத்தியக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டபோது கைது செய்யப்பட்ட 10 சிவில் சமூக ஆர்வலர்களுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

கொழும்பு, கோட்டை நீதிவான் நீதிமன்றம் அவர்களை பிணையில் விடுவித்தது.

சர்ச்சைக்குரிய தரமற்ற மருந்துகளை இறக்குமதி செய்த குற்றச்சாட்டின் பேரில் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவை கைது செய்யுமாறு கோரி சிவில் சமூக ஆர்வலர்கள் நேற்று மாலை குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டபோதே கைது செய்யப்பட்டனர்

Recommended For You

About the Author: admin